வெளியிடப்பட்ட நேரம்: 08:19 (03/11/2018)

கடைசி தொடர்பு:08:19 (03/11/2018)

‘இரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கலாம்’- தடையை விலக்கிய அமெரிக்கா

ரான் மீது ஏற்கெனவே பொருளாதாரத் தடைவிதிப்பதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. பொருளாதாரத் தடைக்கு ஒத்துழைக்காத நாடுகளின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்தியா கச்சா எண்ணெய்களைச் சவுதி அரேபியா, இராக் மற்றும் இரான் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதன் மூலம் தேவையை பூர்த்தி செய்துவருகிறது. இரானிலிருந்து ஆண்டுக்கு 1.90 கோடி டன்களுக்கு அதிகமாக கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. நவம்பர் 4-ம் தேதிக்குள் எல்லா நாடுகளும் இரான் மீதான பொருளாதாரத் தடையைப் பின்பற்ற வேண்டும் எனக் கெடு தேதியை அறிவித்திருந்தது. இரானிலிருந்து சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள், தென் கொரியா போன்ற முக்கியமான நாடுகளும் கச்சா எண்ணெய் வாங்கிவருகின்றன.

கச்சா எண்ணெய்

ஆனால் இந்தியா, இரானில் இருந்து இறக்குமதி செய்வதில் எந்த மாற்றமும் இல்லை என வெளிப்படுத்தியது. அமெரிக்கா கொடுத்த கெடு நெருங்கிய நிலையில் கச்சா எண்ணெய் வாங்குவதில் ஜப்பான், இந்தியா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு விலக்கு அளிப்பதாகச் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய  அமெரிக்காவின் வெளியுறவுத் துறை மந்திரி மைக் பாம்பியோ `` இரானில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எட்டு நாடுகளுக்குத் தற்காலிக விலக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. இது விஷயமாகச் சம்பந்தப்பட்ட நாடுகளுடன் திங்கட் கிழமை பேசுவோம், ஆனாலும் எண்ணெய் வாங்கும் அளவைக் குறைக்க உள்ளோம் “ எனக்கூறியுள்ளார்.