வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (03/11/2018)

கடைசி தொடர்பு:15:00 (03/11/2018)

நன்மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியீடு:  சிங்கப்பூர், ஜெர்மனி முதலிடம்

பவர்ஃபுல் பாஸ்போர்ட் பட்டியலில் சிங்கப்பூர், ஜெர்மனி நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன.

லகின் நன்மதிப்பு வாய்ந்த பாஸ்போர்ட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூர், ஜெர்மனி நாடுகள் முதலிடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலகின் 127 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். விமானநிலையத்தில் சென்று இறங்கி 33 நாடுகளின் விசாக்களைப் பெற்றுக் கொள்ளலாம். 

பாஸ்போர்ட்

கடந்த முறை 51 புள்ளிகளுடன் 71-வது இடத்தில் இருந்த இந்தியா நடப்பாண்டில் 66-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 25 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லலாம். 41 நாடுகளில் அங்கு சென்ற பின் விசா எடுத்துக் கொள்ள முடியும். 132 நாடுகளுக்குச் செல்ல கண்டிப்பாக விசா எடுக்க வேண்டும். 

டென்மார்க், பின்லாந்து, ஸ்வீடன், லக்ஸ்ம்பர்க், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், நார்வே, தென்கொரியா, அமெரிக்கா, நெதர்லாந்து நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன. 164 நாடுகளுக்கு விசா இல்லாமல் இந்த நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களால் செல்ல முடியும். 

பட்டியலில் 92-வது இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தானுக்குக் கடைசி இடம். பாகிஸ்தான் 90-வது இடத்தைப் பிடித்துள்ளது. இராக் நாட்டுக்கு 91-வது இடம். சிரியா 88-வது இடத்தையும் சோமாலியா 89-வது இடத்தையும் பிடித்துள்ளன. 

Henley என்ற அமைப்பு சர்வதேச விமானப் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து `பாஸ்போர்ட் ரேங்க்’ என்ற பெயரில் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க