வெளியிடப்பட்ட நேரம்: 11:06 (04/11/2018)

கடைசி தொடர்பு:11:19 (04/11/2018)

சீனாவில் 15 பேரை பலிகொண்ட சாலை விபத்து- அப்பளம் போல் நொறுங்கிய வாகனங்கள்

சீனாவில் கட்டுப்பாட்டை இழந்த கன ரக வாகனம் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து

Credits: https://twitter.com/CGTNOfficial

சினாவின் வடமேற்கு மாகாணமான கன்சு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் நேற்று இரவு வாகனங்கள் வரிசையாக நின்றுகொண்டிருந்தன. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கனரக வாகனம் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுங்கச்சாவடியில் நின்றுகொண்டிருந்த பிற வாகனங்களின் மீது மோதியது. இதில் சுமார் 30 வாகனங்கள் கடுமையான சேதத்திற்குள்ளாகின. இந்த விபத்தில் வாகன ஓட்டிகள், பயணிகள் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் கனரக வாகன ஓட்டுநர் காயங்களுடன் உயிர்தப்பினார். அவரைக் கைது செய்த காவல்துறையினர் விபத்து குறித்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த வாரம் சீனாவில் பேருந்து ஒன்று ஆற்றுக்குள் கவிழ்ந்த விபத்தில் 13பேர் உயிரிழந்தனர். இது நடந்து ஒரு வாரத்தில் மற்றொரு துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.