இலங்கை அமைச்சர் மனுஷா நாணயக்கார ராஜினாமா! | Deputy Minister of Foreign Employment Manusha Nanayakkara has resigned

வெளியிடப்பட்ட நேரம்: 13:11 (06/11/2018)

கடைசி தொடர்பு:07:53 (07/11/2018)

இலங்கை அமைச்சர் மனுஷா நாணயக்கார ராஜினாமா!

இலங்கையில் தொழில் , வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக இருந்த மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கை

இலங்கையில் நாடாளுமன்ற கூட்டம் முடிந்ததையடுத்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து அதிபர் மைத்திரி பால சிறிசேன பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். சிறிசேன அமைச்சரவையில் பிரதமராக முன்னாள் அதிபர் ரணில் விக்கரமசிங்கே பதவி ஏற்றுச் செயல்பட்டு வந்தார். திடீரென பிரதமராக இருந்த ரணில் விக்கரமசிங்கே அதிரடியாக நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக மகிந்த ராஜபக்சே பிரதமராகப் பதவியேற்றதற்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இலங்கை சுதந்திர கட்சிகள் கூட்டணி அமைத்தே இலங்கையில் ஆட்சி நடத்தி வந்தன. இந்தக் கூட்டணியில் பிளவு ஏற்படவே, சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மகிந்த ராஜபக்சே மீண்டும் பிரதமராக்கப்பட்டுள்ளார். 

இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 14-ம் தேதியன்று கூட்டுவதற்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷா நாணயக்கார ராஜினாமா செய்துள்ளார்.. தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் சிறிசேனவுக்கு அனுப்பி வைத்த மனுஷா நாணயக்காரா ரணில் விக்ரமசிங்கை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.