`தவறு செய்தால் இதுதான் தண்டனை!' - ஊழியர்களைப் பதறவைக்கும் சீன நிறுவனம் | drink water from a toilet bowl and had their salaries withheld by a month,

வெளியிடப்பட்ட நேரம்: 11:50 (09/11/2018)

கடைசி தொடர்பு:11:50 (09/11/2018)

`தவறு செய்தால் இதுதான் தண்டனை!' - ஊழியர்களைப் பதறவைக்கும் சீன நிறுவனம்

பெய்ஜிங்கில் உள்ள வீடு பராமரிப்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனம்தான், தற்போது சீனாவில் ‘ஹாட் டாக்’. அப்படி இந்த நிறுவனம் என்ன செய்துவிட்டது என்கிறீர்களா...  

ஜப்பான்

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்ந்த் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வீடு பராமரிப்பு மற்றும் கட்டுமான நிறுவனத்தில், ஊழியர்கள் செய்யும் சிறுசிறு தவறுகளுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கண்டிப்பு என்ற பெயரில், இந்த நிறுவனம் செய்யும் அட்டூழியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை ஊழியர்கள் சரியான நேரத்தில் முடிக்கத் தவறினால் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுகிறது. இந்தத் தண்டனைகள் மனிதாபிமானமற்றதாக உள்ளது. பாத்ரூமில் வரும் தண்ணீரை அருந்த வேண்டும், கரப்பான்பூச்சிகளைச் சாப்பிட வேண்டும். சிறுநீரை அருந்த வேண்டும் என ஊழியர்களைத் துன்புறுத்துகின்றனர். ஆபீஸுக்கு லேட்டா வந்தா, டை கட்டலனா, ஷூ போடலனா இப்படி எதற்கெடுத்தாலும் ஆக்‌ஷன் தானாம். நிர்வாகம் சொல்வதைச் செய்ய மறுத்தாலும் பெல்ட் சுழற்றப்படுமாம். தண்டனை மட்டும்தான் என நினைக்காதீர்கள். சம்பளம் பிடித்தம், அபராதம் என அடுத்த லிஸ்ட் தயாராக இருக்கும். 

ஏதோ, இந்தத் தண்டனைகள் எல்லாம் யாருக்கும் தெரியாமல் நடக்கிறதா என்று கேட்டால், அதுவும் இல்லை. அலுவலகத்தில் இருக்கும் மொத்த ஊழியர்களின் முன்னிலையில்தான் இந்தத் தண்டனைகள் அனைத்தும் வழங்கப்படுமாம். இதுகுறித்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. இது, சீனர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து, அந்த நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று மேலாளர்களைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.