வெளியிடப்பட்ட நேரம்: 17:50 (09/11/2018)

கடைசி தொடர்பு:17:50 (09/11/2018)

ஸ்டீபன் ஹாக்கிங் இருந்தாலும் ஆயிரம் பொன்... இறந்தாலும் ஆயிரம் பொன்!

யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்ற பழமொழிக்கு ஏற்ற வகையில் பிரபல அறிவியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங்கின் வீல் சேர் ரூ.3 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது. 

ஸ்டீபன் ஹாக்கிங்

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியல் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங் கடந்த மார்ச் மாதத்தில் தன் 76-வது வயதில் இறந்தார். எழுந்து நடக்க முடியாத ஸ்டீபன் ஹாக்கிங்கின் வாழ்க்கை வீல்சேரில்தான் கழிந்தது. சிறுவயதிலேயே நரம்பு நோயால் பாதிக்கப்பட்டதால் அவரால் நடக்க முடியாமல் போனது, கைகள் இயக்கம், பேச்சு போன்றவை பாதிக்கப்பட்டன. இதனால் அவரின் வாழ்க்கை வீல் சேரிலேயே கழிந்தது. எனினும், சோர்வடைந்து விடாத ஸ்டீபன் ஹாங்கிங் இயற்பியல், வானியல், கோள்கள், கருந்துளை ஆராய்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி வந்தார். 

ஸ்டீபன் ஹாங்கிங் மறைந்த பிறகு அவர் பயன்படுத்திய 22 பொருள்களை நியூயார்க் நகரைச் சேர்ந்த 'கிறிஸ்டி ' என்ற அமைப்பு ஏலத்தில் விட்டது. 1965-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டத்துக்காக ஸ்டீபன் ஹாங்கிங் கைப்பட எழுதிய 117 பக்கங்கள் கொண்ட ஆராய்ச்சிக் கட்டுரை 5 கோடியே 55 லட்சத்துக்கு ஏலம் போனது. நோயால் பாதிக்கப்படுவதற்கு முன் ஸ்டீபன் ஹாக்கிங் கைப்பட எழுதிய ஆராய்ச்சிக்கட்டுரை இது. 

ஸ்டீபன் ஹாங்கிங்கை வாழ்நாள் முழுவதும் தாங்கி வந்த பிரசித்திபெற்ற நவீன வசதிகள் கொண்ட சக்கர நாற்காலி ரூ.3 கோடிக்கு ஏலம் போனது. 'ஹாக்கிங்கின் வீல் சேர் உடல் குறைப்பாட்டின் அடையாளம் அல்ல... நவீன அறிவியல்  அடையாளம் ' என்று சொல்வார்கள். ஸ்டீபன் ஹாக்கிங் அறக்கட்டளை உருவாக்குவதற்காக அவர் பயன்படுத்திய பொருள்கள் ஏலத்தில் விடப்பட்டன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க