வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (12/11/2018)

கடைசி தொடர்பு:14:20 (12/11/2018)

`பிறந்த உடனே நிச்சயம்’ - கென்யப் பெண்களைச் சுற்றி நடக்கும் விநோதப் பாரம்பர்யம்

பெண் குழந்தை பிறந்த உடன் திருமண நிச்சயம்- கென்யா மக்களின் பாரம்பர்யம்.

பெண்ணின் திருமண வயது 18 என இந்தியாவில் சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பால்ய விவாகங்கள் இன்னும்கூட கிராமங்களில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அது தொடர்பான வழக்குகளும் பதியப்படுகின்றன. ஒரு பெண் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் திருமணத்துக்கு பக்குவப்பட 18 வயது ஆகும் எனக் காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், கென்யா நாட்டில் உள்ள ஒரோமோ சமூகத்தினர் தங்களுக்குப் பெண் குழந்தை பிறந்த உடன் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த வயது மூத்த சிறுவனை அந்தப் பெண் குழந்தைக்குக் கணவனாக திருமணம் நிச்சயிக்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

                                                                                                குழந்தை
பிறந்திருக்கும் பெண் குழந்தையின் தந்தை தன் மகளின் வாழ்க்கைத் துணையாகத் தேர்வு செய்யும் சிறுவனின் பெற்றோர்கள் தங்கள் வழக்கப்படி டராரா என்ற கயிற்றை அணிவித்துவிடுகின்றனர். மேலும் கணவனாகத் தேர்வு செய்யப்படும் சிறுவன் குழந்தைக்கு மாலை அணிவித்து தன் மனைவியாக ஏற்றுக்கொள்கிறான். இது குறித்து ஒரோமோ சமூக மக்கள் பேசும்போது ``பெண் குழந்தைக்கு தந்தை அளிக்கும் எதுவும் சரியானதாகத்தான் இருக்கும். மேலும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவது என்பது பெண் குழந்தைகளின் கடமையாக நாங்கள் எண்ணுகிறோம் அதனால் எங்களின் இந்தப் பாரம்பர்யத் திருமண முறையை இன்னும் கடைப்பிடித்து வருகிறோம். நிச்சயக்கப்படும் ஆணுடன் 15 வயதுக்குப்பின் திருமணம் செய்து வைத்துவிடுவோம். அதற்குள் அந்த ஆணுக்கு ஏதேனும்  நிகழ்ந்துவிட்டால் வாழ்க்கை முழுவதும் மனதார அவர்களை நினைத்துக்கொண்டே வாழ்ந்துவிடுவோம். இந்தப் பாரம்பர்யத்தைக் கட்டிக்காப்பது எங்கள் ஒரோமோ பெண் சமூகத்தின் கடமையாகப் பார்க்கிறோம். இதனால் எங்கள் சமூக மக்களிடையே உறவுகள் மேம்பட்டு இருக்கின்றன'' என மகிழ்ச்சியாகத் தெரிவித்தனர்.