வெளியிடப்பட்ட நேரம்: 14:45 (13/11/2018)

கடைசி தொடர்பு:14:45 (13/11/2018)

``நானும் ஒபாமாவும் கவுன்சலிங் சென்றோம்” - திருமண வாழ்க்கை குறித்து மிச்சல் ஒபாமா!

``நாங்கள் எங்களுக்கு முதலில் நேர்மையாக இருப்பது அவசியம் என்று நினைத்தோம். நீங்கள் திருமண உறவுக்குள் நுழைந்தால், சில சமயம் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று தோன்றலாம். இது இயல்பாகப் பலருக்கும் நிகழக்கூடியதுதான்.”

``நானும் ஒபாமாவும் கவுன்சலிங் சென்றோம்” - திருமண வாழ்க்கை குறித்து மிச்சல் ஒபாமா!

மிச்சல் ஒபாமா

மெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சல் ஒபாமா, தன் 26 வருடத் திருமண வாழ்க்கையில், தாங்கள் சந்தித்த சவால்களையும், இருவரும் சேர்ந்து அவற்றைக் கையாண்ட விதம் குறித்தும் சமீபத்தில் சர்வதேச ஊடகம் ஒன்றில் வெளிப்படையாகப் பேட்டியளித்திருந்தார். அதையடுத்து, அவர், தான் இதுவரை கடந்து வந்த வாழ்க்கைப் பாதை குறித்து, ‘The Becoming’ என்ற புத்தகமாக இன்று (நவம்பர் 13) வெளியிடவுள்ளார். இந்த நிலையில், அவர் பேசும்போது, ``நாங்கள் பிறருக்கு ரோல் மாடல்களாக இருக்கும் பட்சத்தில், நாங்கள் எங்களுக்கு முதலில் நேர்மையாக இருப்பது அவசியம் என்று நினைத்தோம். நீங்கள் திருமண உறவுக்குள் நுழைந்தால், சில சமயம் அதிலிருந்து வெளிவர வேண்டும் என்று தோன்றலாம். இது இயல்பாகப் பலருக்கும் நிகழக்கூடியதுதான். ஏனென்றால், நானும் அவ்வாறு உணர்ந்திருக்கிறேன். இப்படியான உணர்வு வந்ததும், நாங்கள் இருவரும் கவுன்சலிங் சென்றோம். எங்களுடைய வேறுபாடுகளை நாங்கள் வெளிப்படையாகப் பேசுவதற்கு கவுன்சலிங் உதவியது!” என்றார்.

மிச்சல் ஒபாமா

மிச்சல் ஒபாமா, ‘The Becoming'  புத்தகத்தில், அவரும் கணவர் பராக் ஒபாமாவும் சந்தித்த சிக்கல்களைப் பற்றி விரிவாக எழுதியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 1992-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருக்க, மிச்சல் ஒபாமா தாய்மையடைய மிகவும் சிரமப்பட்டதால், இருவருக்குமிடையே விரிசல் ஏற்பட்டன என்று குறிப்பிட்டிருக்கிறார். தற்போது, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்துக்குப் பிறகு, ஒபாமா தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருந்ததும் மிச்சல் ஒபாமாவுக்கு வெறுமையை ஏற்படுத்தியிருக்கிறது.

மிச்சல் ஒபாமா

``கவுன்சலிங் என்னுடைய மகிழ்ச்சியை நானே தீர்மானிக்கும் திறனை எனக்கு அளித்தது. அது தந்த நம்பிக்கையில், என் இலக்குகள் நோக்கி நான் பயணித்தேன். அதற்காக, நான் உதவிகள் கேட்கத் துவங்கினேன்; அவரிடம் மட்டுமல்ல, மற்றவர்களிடமும்கூட. இந்த விஷயங்களை இப்போது ஏன் கூறுகிறேன். எனில், மக்கள் எங்களை மிகவும் பொருத்தமான ஜோடியாகப் பார்க்கின்றனர். அதற்கான காரணங்களையும் அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே” என்று தெரிவித்திருக்கிறார் மிச்சல் ஒபாமா. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க