வெளியிடப்பட்ட நேரம்: 18:10 (17/11/2018)

கடைசி தொடர்பு:18:10 (17/11/2018)

`உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கலாம்!' - நாடாளுமன்றத்தை அதிரவைத்த அயர்லாந்துப் பெண் எம்.பி #Thisisnotconsent

`உங்களுக்கு தர்மசங்கடமாக இருக்கலாம்!' - நாடாளுமன்றத்தை அதிரவைத்த அயர்லாந்துப் பெண் எம்.பி #Thisisnotconsent

அயர்லாந்து

யர்லாந்து நாட்டில், ஒரு பாலியல் வன்முறை வழக்கில் ‘ஆதாரத்தின் அடிப்படையில்’ வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பைக் கேட்டு கொதித்துள்ளனர், அந்நாட்டு மக்கள். 17 வயது இளம்பெண்ணை  27 வயதுடைய ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடந்த விசாரணையில், குற்றவாளியின் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், "அந்தப் பெண் எப்படி ஆடை அணிந்திருந்தார் என்பதைக்  கவனிக்க வேண்டும். அவர், மிகவும் மெலிதான உள்ளாடை அணிந்திருந்தார்” என்றார். இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம்,  ’இருவரும் விருப்பப்பட்டே பாலியல் உறவில் இருந்திருக்கலாம்’ என்று முடிவுசெய்து, குற்றம் சாட்டப்பட்ட நபர், நிரபராதி என விடுவிக்கப்பட்டார்.

அயர்லாந்து

இந்த விவகாரம் ஏற்படுத்திய சர்ச்சையைத் தொடர்ந்து, அயர்லாந்துப் பெண் எம்.பி ருத் கோப்பிங்கர் (Ruth Coppinger), நாடாளுமன்றத்தில் உள்ளாடை ஒன்றைத் தூக்கிக்காட்டி,  “இங்கு இந்த மெலிதான உள்ளாடையைக் காட்டுவது உங்களுக்குத்  தர்மசங்கடமாக இருக்கலாம். அப்போது, நீதிமன்றத்தில்  பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, தன் உள்ளாடை காண்பிக்கப்பட்டபோது , அவருக்கு எப்படி இருந்திருக்கும்” என்று அங்கு இருந்த அனைவருக்கும் உறைக்கும்படிக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

பாலியல் வன்முறை

மேலும் , இந்தத் தீர்ப்புக்கு எதிராக சமூக வலைதளங்களில் பலரும் தங்களின் உள்ளாடையின் புகைப்படங்களைப் பதிவிட்டு, “இது சம்மதத்துக்கான அடையாளம் அல்ல” என்று #ThisIsNotConsent என்ற ஹேஷ்டேக்குடன் பதிவிட்டுவருகின்றனர். மேலும் பலர், பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணைகளில், மற்ற நாடுகள் எப்படிக் கையாளுகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.

“அயர்லாந்து நீதிமன்றங்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களையே  குற்றம் சாட்டுவது தொடர்கதையாகிவிட்டது. இந்தப் போக்கு, இந்நாட்டுப் பெண்களை மிகவும் சோர்வடையச் செய்கிறது" என்று தெரிவித்திருக்கிறார், எம்.பி ருத்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க