`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ! | After Flight Gets Cancelled, Frustrated Pakistani Passenger Sets His Own Luggage On Fire

வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (21/11/2018)

கடைசி தொடர்பு:09:15 (21/11/2018)

`ரத்தான விமானம் ; அதிகாரிகளைப் பதறவைக்க வாலிபர் செய்த காரியம்' - வைரல் வீடியோ!

பேருந்து, ரயில் பயணங்களைப் போல அல்லாமல், பெரும்பாலும் விமானப் பயணங்கள் எப்போது ரத்தாகும் என்பது தெரியாது. காலநிலை மாற்றங்கள், வெடிகுண்டு மிரட்டல்கள் எனப் பல்வேறு காரணங்களால் விமானப் பயணங்கள் பலமுறை ரத்துசெய்யப்பட்டுள்ளன. அப்படி ரத்தாகும் பயணிகள், சில சமயம் எதிர்ப்பு தெரிவிப்பர். இருப்பினும், வேறுவழியில்லாமல் அடுத்த விமானத்தைப் பிடித்து செல்வார்கள்.

விமானம்

 இதேபோன்று ஒரு சம்பவம் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் நடந்துள்ளது. கடந்த 16-ம் தேதி,  இஸ்லாமாபாத்திலிருந்து ஃகில்கிட்டுக்கு பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் காலை 7 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. பயணிகள் காத்திருந்தனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதலில் விமானம் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டது. 

 சிறிது நேரம் கழித்து, மோசமான வானிலை காரணமாக விமானம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் கோபமடைந்தனர். அவர்களைச் சமாதானம்செய்த அதிகாரிகள், சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை இயக்கப்படும்; அதுவரை ஹோட்டலில் தங்கியிருங்கள் எனக் கூறி அனுப்பிவைத்தனர். ஆனால், இவர்களது சமாதானத்தை ஏற்காத ஒருவர், மிகுந்த கோபத்தில், விமானம் ரத்து செய்யப்பட்டதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தான் வைத்திருந்த பொருள்களை விமான நிலையத்தில் வைத்தே எரித்தார்.

photo credit: indiatimes

மேலும், அதை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.  இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஒருவழியாக அவரை சமாதானம் செய்து அதிகாரிகள் அழைத்துச்சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகிவருகிறது.

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க