தாமதமாக வந்து தவறவிட்ட விமானத்தைத் துரத்திய பெண் - வைரலான வீடியோ! | women chases plane after coming late

வெளியிடப்பட்ட நேரம்: 13:02 (22/11/2018)

கடைசி தொடர்பு:13:02 (22/11/2018)

தாமதமாக வந்து தவறவிட்ட விமானத்தைத் துரத்திய பெண் - வைரலான வீடியோ!

விமானத்தைத் துரத்திப்பிடிக்கும் காட்சிகள் ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடப்பதைப் பார்த்திருக்கிறோம். படத்தில் பார்க்கும்போதே இது நிஜத்தில் சாத்தியமில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால், நிஜத்தில் பெண் ஒருவர் இதைச் செய்ய முயன்றிருக்கிறார். 

விமானத்தை துரத்தியப் பெண்

இந்தோனேசியாவில், ஹனா என்ற பெண், பாலியில் இருந்து ஜகார்டாவுக்குச் செல்ல விமானத்தில் டிக்கெட் புக் செய்துள்ளார். ஆனால், விமானத்துக்குச் செல்லும் போர்டிங் நேரத்துக்கு 10 நிமிடம் தாமதமாக வந்ததால், விமான நிலைய அதிகாரிகள் அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவர்  அதிருப்தி அடைந்தார். பின்னர், யாரும் எதிர்பார்க்காத வேளையில், கடும் பாதுகாப்பு அரணை மீறி உள்ளே சென்றார். பின்னர், தனது விமானத்தை நோக்கி ஓட ஆரம்பித்தார். அவரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். ஆனாலும், அவர் தொடர்ந்து முன்னேற முயன்றார். பின்னர் நிலை தடுமாறி விழுந்தார். 

இந்தக் காட்சிகள் அனைத்தும் விமான நிலையத்தில் இருந்த கேமராவில் பதிவானது.  இது தொடர்பாகப் பேசிய விமான நிலைய அதிகாரிகள்,  ``போர்டிங் கேட் காலை 6.50 -க்கு மூடப்பட்டது. அவர் விமான நிலையத்துக்கு 6.27 -க்கு வந்துள்ளார். அவரை மூன்று முறை தொடர்பு கொண்டபோதும் அவர்  எடுத்துப் பேசவில்லை. இதனால், வேறு வழியில்லாமல் கேட் மூடப்பட்டது” என்றார். பின்னர் அவர், வேறு விமானத்தில் பத்திரமாக ஜகார்டா நகருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.