பணத்தை மிச்சம்பிடிக்க மூன்று வேளையும் நூடுல்ஸ்!- மாணவிக்கு வினையான `சிங்கிள்ஸ் டே' | Student eats only instant noodles for 3 weeks to save money;

வெளியிடப்பட்ட நேரம்: 13:35 (22/11/2018)

கடைசி தொடர்பு:13:35 (22/11/2018)

பணத்தை மிச்சம்பிடிக்க மூன்று வேளையும் நூடுல்ஸ்!- மாணவிக்கு வினையான `சிங்கிள்ஸ் டே'

பணி நிமித்தமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் வசிக்கும் சிங்கில்ஸுக்குப் பல சமயங்களில் இன்ஸ்டன்ட்  நூடுல்ஸ்தான் உணவாக இருக்கும். காரணம் நூடுல்ஸ் சமைப்பதற்கு சுலபம். இந்தியாவை விடவும் வெளிநாடுகளில்தான் நூடுல்ஸ் அதிகமாக உட்கொள்ளப்படுகிறது. ஆனால், எந்த நாடாக இருந்தாலும் வாரத்துக்கு 7 நாள்களும் அதையே உட்கொண்டால் உடலுக்குப் பல்வேறு கேடுகளை விளைவித்துவிடும். இதற்குச் சான்றாக சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

நூடுல்ஸ்
 

சம்பவத்தைப் பற்றித் தெரிந்து கொள்வதற்கு முன்னர் சீனாவின் சிங்கிள்ஸ் டே பற்றி ஒரு சின்ன இன்ட்ரோ..

`சிங்கிள்ஸ் டே’ என்பது, சீனாவில் திருமணமாகாமல் சிங்கிளாக இருக்கும் இளைஞர், இளைஞிகள் கொண்டாடும் குதூகலமான நாள். ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 11-ம் தேதி, சிங்கிள்ஸ் டே கொண்டாடப்படுகிறது. சிங்கிள்ஸை இன்னும் குஷிப்படுத்தும் வகையில் அலிபாபா நிறுவனம் `சிங்கிள்ஸ் டே சேல்’ என்னும் தள்ளுபடி விற்பனையை நடத்தி வருகிறது. சிங்கிஸ்ஸ் டே சேல் சீன இளைஞர் இளைஞிகளின் கனவு நாள் ஆகும். அந்த நாளுக்காக ஆண்டு முழுவதும் பணத்தைச் சேர்த்து வைப்பார்கள். தங்களுக்குப் பிடித்த பொருள்களைத் தள்ளுபடி விலையில் அள்ளிச் செல்வார்கள். 

இப்போது அந்த நூடுல்ஸ் சம்பவத்துக்கு வருவோம்..

சீனாவின் ப்ரோக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் ஹாங் ஜியா. இவர் ஜியாங்சு மாகாணத்தில் வசித்து வந்தார். இந்தப் பெண், சிங்கிள்ஸ் டே ஷாப்பிங்கிற்காகப் பணத்தைச் சேர்த்து வைக்கத் தவறிவிட்டார். நவம்பர் மாதம் தொடக்கத்தில்தான் அவருக்கு சிங்கிள்ஸ் டே சேல்ஸ் நினைவுக்கே வந்தது. இரண்டு வாரங்களே இருந்த நிலையில், சிங்கிள்ஸ் டே சேல்ஸ் ஷாப்பிங்கிற்காக உணவு விஷயத்தில் பணத்தை மிச்சம் பிடிக்கத் தொடங்கினார். மூன்று வேளையும் இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கிச் சமைத்துச் சாப்பிட்டார். இரண்டு வாரங்களில் 100 டாலர் சேமித்தார். இந்த விஷயத்தை வீடியோவாகப் பேசி சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். வீடியோ வைரலானது.

ஹாங் ஜியா
 

வெகு நாள் காத்திருந்த சிங்கிள்ஸ் டே நெருங்கியது. ஆனால் நவம்பர் 10-ம் தேதி ஹாங் ஜியாவுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அவரின் சேமிப்புப் பணம் அவ்வளவும் மருத்துவமனையில் செலவானது. மறுநாள் சிங்கிள்ஸ் டே. எந்தக் கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. ஹாங் ஜியாவால் ஆன்லைன் சிங்கிள்ஸ் டே சேலில் ஒரே ஒரு பொருள் மட்டுமே வாங்க முடிந்தது. அதுவும் ஃபேசியல் மாஸ்க் ( facial mask) ஹாங் ஜியாவுக்கு ஏற்பட்ட இந்த நிலை குறித்து சீன ஊடகம் ஒன்று வீடியோவாகச் செய்தி வெளியிட்டது. அதைப்  பார்த்த ஹாங் ஜியாவின் தாய் தன் மகளை போனில் அழைத்து, `உன் வீடியோவை நானும் பார்த்தேன். இது உனக்குத் தேவைதான். தயவு செய்து ஆரோக்கியமான உணவைச் சாப்பிடு. வெந்நீர் குடி’ என்று பேசினாராம்.   

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க