சரப்ஜித் சிங்கை சந்திக்க இந்திய அதிகாரிகளுக்கு அனுமதி மறுப்பு!

லாகூர்: கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கை சந்திக்க இந்திய தூதரக அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் அரசு அனுமதி மறுத்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தூக்குத் தண்டனை விதி்க்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்தியர் சரப்ஜித் சிங், நேற்று முன்தினம் கைதிகளால் பலமாக தாக்கப்பட்டார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சரப்ஜித் சிங், கோமா நிலைக்கு சென்றார். லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சரப்ஜித் சிங்குக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு இந்தியா கோரிக்கை வைத்திருந்தது.

இந்த நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  சரப்ஜித் சிந்திக்க இந்திய அரசு அனுமதி கேட்டிருந்தது. ஆனால், பாகிஸ்தான் அரசு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.


இதனால் இருநாட்டுக்கு இடையேயான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!