வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (28/04/2013)

கடைசி தொடர்பு:16:42 (28/04/2013)

பாக். மருத்துவமனையில் சரப்ஜித்துடன் குடும்பத்தினர் சந்திப்பு!

லாகூர்: சிறைக்கைதிகளால் தாக்கப்பட்டு லாகூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்தியர் சரப்ஜித் சிங்கை அவரது குடும்பத்தினர் இன்று சந்தித்தனர்.

1990 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட சரப்ஜித் சிங்கிற்கு அந்நாட்டு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

இந்த நிலையில் சிறையில் இருந்த சரப்ஜித் சிங் மீது கைதிகள் நடத்திய தாக்குதலில் தலையில் பலத்த காயம் அடைந்து கோமா நிலையில் லாகூரில் உள்ள ஜின்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே, சரப்ஜித் சிங்கின் மனைவி, இரு மகள்கள் மற்றும் சகோதரி ஆகியோருக்கு 15 நாட்களுக்கான விசா வழங்கப்பட்டது.

இதையடுத்து, பாகிஸ்தான் சென்ற அவர்கள் ஜின்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரப்ஜித் சிங்கை சந்தித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்