விமான நிலையத்தில் புகுந்து விமானத்தைத் திருடிய சிறுவர்கள்! - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள் | Two Teens Steal An Airplane in america

வெளியிடப்பட்ட நேரம்: 14:35 (23/11/2018)

கடைசி தொடர்பு:14:35 (23/11/2018)

விமான நிலையத்தில் புகுந்து விமானத்தைத் திருடிய சிறுவர்கள்! - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

ஆளில்லா சிறிய ரக விமானத்தை இரண்டு சிறுவர்கள் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவர்கள் திருடிய விமானம்

photo credit: FB/Uintah County Sheriff's Office

ஹாலிவுட் படங்களில் ஹீரோக்கள் விமானத்தைத் திருடுவது போன்று காட்சிகள் இடம்பெறும். ஹாலிவுட் படத்தைப் போலவே நிஜத்திலும் அது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஆனால், விமானத்தைத் திருடியது ஹீரோக்கள் அல்ல; 14 வயதுடைய இரண்டு சிறுவர்கள். இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது அமெரிக்காவின் உத்தா மாகாணத்தில். உத்தா நகர போலீஸார் தங்களின் ஃபேஸ்புக் பக்கத்தில் இது குறித்து வெளியிட்ட பதிவில், ``நேற்று முன்தினம் உத்தா நகரில் உள்ள சிறிய உள்நாட்டு விமான நிலையத்தில் விமானம் நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அங்கு டிராக்டரில் வந்த இரு சிறுவர்கள் விமானி இல்லாமல் இருந்த விமானத்தை இயக்க ஆரம்பித்தனர். தொடர்ந்து விமானத்தில் பறக்க ஆரம்பித்தனர். இதைப் பார்த்து விமான நிலைய அதிகாரிகள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 

அதன்பின் வந்த போலீஸார் கட்டுப்பாட்டு அறையில் இருந்துகொண்டு சிறுவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைத் தரையிறங்க வைத்தனர். எப்படித் தரையிறங்க வேண்டும் என்பது குறித்து சிறுவர்களுக்கு எடுத்துரைத்த அதிகாரிகள் விமானத்தைப் பத்திரமாக தரையிறக்க உதவினர்." எனக் கூறப்பட்டுள்ளது.

சுமார் 24 மைல் தொலைவு பறந்த அந்தச் சிறுவர்களை போலீஸார் கைது செய்து சிறுவர்கள் சிறையில் அடைத்துள்ளனர். விமானம் ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய வகை விமானம் என்பதால் சிறுவர்கள் உயரப் பறக்க முடியவில்லை. தாழ்வாகவே பறக்க முடிந்துள்ளது எனக் கூறும் போலீஸ் அதிகாரிகள், விமானத்தை இயக்க எப்படிக் கற்றுக்கொண்டார்கள் என்று தெரியவில்லை எனக் கூறியுள்ளது. இந்தச் சம்பவம் விமான நிலையத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க