வெளியிடப்பட்ட நேரம்: 06:15 (24/11/2018)

கடைசி தொடர்பு:06:15 (24/11/2018)

‘6,000 அரிய வகை மீன்கள் இறப்பு!’- பாலத்தின் கட்டுமானப் பணியை நிறுத்திய சீனா

சீனாவில் புதிய பாலத்திற்கான கட்டுமானப் பணிகளின் காரணமாக அரிய வகை மீன்கள் இறந்ததால் கட்டுமானப் பணி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவலை சைனா டெய்லி என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது.

மீன்

சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள ஜிங்ஸோ என்ற இடத்தில்தான் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நகரத்தில் ஓடும் யாங்சே ஆற்றின் அருகே இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. அந்த ஆறு Chinese sturgeon எனப்படும் ஒரு வகை மீன்கள் அதிகம் காணப்படும் பகுதிகளில் ஒன்றாக இருக்கிறது. Chinese sturgeon என்று அழைக்கப்படும் இந்த வகை மீன்கள் அழிவின் விளிம்பில் உள்ளவையாகக் கருதப்படுகின்றன. ஏற்கெனவே இவற்றின் எண்ணிக்கை மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. இந்நிலையில் கட்டுமானப் பணியின் காரணமாக 6,000 மேற்பட்ட மீன்கள் இறந்தன. ' அதிர்வு, அதிக ஒலி மற்றும் நீராதாரங்களில் ஏற்பட்ட பாதிப்பே இந்த மீன்களின் இறப்பிற்குக் காரணம் என்று அந்த நாளிதழ் குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

சுற்றுச்சூழல் சுற்றுலா பகுதியான அந்த இடத்தில் பாலம் கட்டுவதற்கான அனுமதி முறைகேடான வழியில் பெறப்பட்டுள்ளது தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளன. Chinese sturgeon வகை மீன்கள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் திறன் கொண்டவையாகும்.