`ஒப்புக்கொள்கிறோம்; எங்கள்மீதுதான் தவறு' - தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சாம்சங்! | Samsung Electronics Says Sorry To Staff Who Got Cancer After Working At Its Factories

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (24/11/2018)

கடைசி தொடர்பு:11:15 (24/11/2018)

`ஒப்புக்கொள்கிறோம்; எங்கள்மீதுதான் தவறு' - தொழிலாளர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரிய சாம்சங்!

தனது தொழிற்சாலையில் பணிபுரிந்து, உடல்ரீதியாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களிடம் சாம்சங் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளது.

கிம் கி-நம்

தென்கொரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சாம்சங் நிறுவனம், மொபைல் சந்தையைப் போல் எலெக்ட்ரானிக்ஸ் சந்தையிலும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனத்தின் செமிகண்டக்டர் மற்றும் எல்இடி தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு உடல்ரீதியாகப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. 2007 -ம் ஆண்டே இந்த பாதிப்புகள் குறித்து தகவல் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தொழிற்சாலைகளில் பணியாற்றிய சுமார் 240 தொழிலாளர்கள், உடல்ரீதியாகப் பாதிப்புகளை எதிர்கொண்டனர். புற்றுநோய் போன்ற பெரிய நோய்களை எதிர்கொண்ட இந்தத் தொழிலாளர்களில் சிலர் உயிரிழக்கவும் நேர்ந்தது. இந்த பாதிப்பு அவர்களது குழந்தைகளுக்கும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின்போது, தனது தவற்றை ஒப்புக்கொண்ட சாம்சங், ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்க சம்மதித்தது. அறிவித்தபடியே பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் வழங்க சாம்சங் முன்வந்தது.

கிம் கி-நம்

இதன் நிகழ்ச்சி, தலைநகர் சியோலில் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிம் கி-நம், ``பாதிப்புக்கு உள்ளான தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினரிடம் பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம். தொழிற்சாலையில் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் பணியை முறையாகச் செய்யவில்லை. ஒப்புக்கொள்கிறோம். இதற்காகத் தொழிலாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்" என்றார். சாம்சங்கின் தலைவர் லீ ஜேயோங், ஊழல் வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஊழியர்களிடம் சாம்சங் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close