வெளியிடப்பட்ட நேரம்: 19:25 (28/11/2018)

கடைசி தொடர்பு:19:25 (28/11/2018)

``திமிங்கிலங்கள் அழுதன, கையறு நிலையில் நான் கதறினேன்!’’ - நேரில் பார்த்த பெண் உருக்கமான பதிவு 

நியூசிலாந்தில் ஸ்டூவர்ட் தீவு கடற்கரையில் சமீபத்தில் 145 பைலட் திமிலங்கள் பரிதாபமாக உயிரிழந்தன. இயற்கை ஆர்வலர்களை இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியடைய வைத்தது. திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய மாலையில் லிஸ் கார்ல்ஸன் என்ற பெண் அங்கே தன் நண்பருடன் வந்துள்ளார். திமிங்கிலங்கள் இறந்ததை நேரில் பார்த்தது குறித்து இன்ஸ்டாகிராமில் மனம் உருகும் வகையில் லிஸ் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் 

திமிங்கிலங்கள்

அதில், ``கடற்கரையில் சந்திரன் அஸ்தமனத்தைப் பார்க்க நண்பருடன் வந்தேன். அப்போது கரையில் ஏராளமான திமிங்கிலங்கள் ஒதுங்கிக் கிடந்தன. அவற்றைப் பார்த்து வியந்தோம். ஆனால், அடுத்த கணமே ஏதோ தவறு நடந்துள்ளது என்பதை உணர்ந்துகொண்டோம். நானும் நண்பர் ஜுலியனும் ஒவ்வொன்றாகப் பிடித்து கடலுக்குள் தள்ளிவிட முயன்றோம். அவை எடை அதிகம் என்பதால் எங்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை. எங்கள் முயற்சியும் வீணாகிப்போனது. 

இந்தச் சமயத்தில் ஜூலியன் 15 கிலோ மீட்டர் தொலைவு ஓடிச் சென்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். அவர்கள் வரும் வரையில் நான் என்னால் முடிந்த உதவியை மீன்களுக்குச் செய்துகொண்டிருந்தேன். உண்மையில் திமிங்கிலங்கள் அழுததை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. கையறு நிலையில் நானும் தண்ணீரில் அமர்ந்து அழுதேன் என் வாழ்நாளில் அவை அழுததை என்னால் மறக்க முடியாது. என் வாழ்க்கையில் மிக மோசமான இரவான அன்றைய இரவு அமைந்துவிட்டது'' என்று பதிவிட்டுள்ளார்.

திமிங்கிலங்கள் கரை ஒதுங்கிய அடுத்த நாள் கடலுக்குள் திரும்பிவிடும் என்று அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால், காலையில் திமிங்கிலங்கள் வலியில் கத்திக்கொண்டிருந்தன. வேறு வழியில்லாமல் அவற்றைக் கருணைக் கொலை செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். 

திமிங்கிலங்கள் எதனால் கரை ஒதுங்கின என்று அறிய முடியவில்லை. வேட்டை மீன்கள் விரட்டியதால் கதை ஒதுங்கியதா அல்லது தவறான வழிகாட்டுதல் அல்லது உடல்நிலைக் கோளாறு காரணமா என்று ஆராயப்பட்டு வருகிறது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க