வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (29/11/2018)

கடைசி தொடர்பு:20:26 (29/11/2018)

`உங்களுக்குத் தேவையான ஃபைல் இருந்தால் அனுப்பிவிடுகிறேன்!’ - மாணவருக்கு மெயில் அனுப்பிய லேப்டாப் திருடன்

`நான் ஒரு ஏழை என்னை மன்னித்துவிடுங்கள்; உங்கள் லேப்டாப்பைத் திருடிவிட்டேன்' என்று லேப்டாப்பை பறிகொடுத்த மாணவரிடம் திருடிய திருடன் மெயில் அனுப்பியுள்ளார். இப்படியும் ஒரு திருடனா? என அவர் ஆச்சர்யமடைந்துள்ளார்.

திருடன்

தனக்கு சொந்தமான பொருளை பறிகொடுத்தவர்கள் மனநிலை பெரும்பாலும், திருடிய திருடனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் மற்றும் தங்களது பொருள் திரும்பக் கிடைக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். இது வழக்கமான நடைமுறைதான். ஆனால், இந்த வழக்கத்தை மாற்றி சம்பந்தபட்டவருக்கே சிரிப்பையும் ஆச்சர்யத்தையும் ஒருங்கே வரவழைத்துள்ளது இங்கிலாந்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்த திருட்டு. இங்கிலாந்து, பிர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த ஸ்டீவி வேலன்டைன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், அவருடைய நண்பர் ஒருவரின் லேப்டாப் திருடப்பட்டது குறித்த செய்தி ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவுக்கு 19 லட்சம் லைக்குகள் குவிந்துள்ளது. திருட்டு செய்திக்கு இவ்வளவு லைக்குளா? என்று எண்ணத் தோன்றும். அப்படியொரு சுவாரஸ்ய பதிவு அது. அந்தப் பதிவில் அவர், `என் ஃபிளாட் நண்பர் ஒருவரின் லேப்டாப் திருடுபோயுள்ளது. திருட்டு குறித்து அந்தத் திருடன் அவனுக்கு அனுப்பியுள்ளதை ப்ளீஸ் படியுங்கள்'' என்று கூறி புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். புகைப்படத்தில்,``ஹலோ!. உங்கள் லேப்டாப்பைத் திருடியதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நான் மிகவும் ஏழ்மையில் உள்ளேன்; எனக்கு பணம் தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர் என்பதைத் தெரிந்துகொண்டேன். உங்கள் கல்வி தொடர்பான ஃபைல்கள் ஏதாவது இருந்தால், உங்களுக்கு அது தேவைப்பட்டால் எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் உங்களுக்கு அதை அனுப்புகிறேன். மீண்டும் ஒருமுறை மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்’’ என்று பதிவிட்டுள்ளார்.