வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (30/11/2018)

கடைசி தொடர்பு:10:40 (30/11/2018)

`தேவதை கத்தி’ வன்முறைக்கு எதிரான சின்னம்!

‘தேவதை கத்தி’ இங்கிலாந்தின் லிவர்புல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வன்முறைக்கு எதிரான சின்னமாக இது நிறுவப்பட்டுள்ளது.

தேவதை கத்தி

இங்கிலாந்தின் லிவர்புல் பகுதியில் உள்ள தேவாலயத்தில் வன்முறைக்கு எதிரான சின்னமாக கத்தியால் செய்யப்பட்ட சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. சுமார் 27 அடி உயரம் கொண்ட இந்தச் சிலை ‘தேவதை கத்தி ‘ என்று அழைக்கப்படுகிறது. கத்தியால் நடைபெறும் வன்முறைகளுக்கு எதிராக இந்தச் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதற்காக 1,00,000 கத்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களிடம் இருந்து காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட கத்திகளைக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவாலயத்துக்கு வெளியில் இதைக் காட்சிப்படுத்தவுள்ளனர். வன்முறைகளால் பல்வேறு நாட்டு மக்கள் உயிரிழக்கின்றனர். அமெரிக்காவில் 90 கொலைகள் செய்ததாக முதியவர் ஒருவர் கூறிய வாக்குமூலம் அமெரிக்க நாளிதழ்களின் தலையங்கமாக இருக்கிறது. இந்த நிலையில்தான் இங்கிலாந்தில் வன்முறைக்கு எதிரான சின்னமாக இதை நிறுவியுள்ளனர்.

இந்தச் சிலையை உருவாக்கிய பிராட்லி (Alfie Bradley) கூறுகையில், ``வன்முறைக்கு எதிரான சின்னமான இதை உருவாக்க ஒரு வருட காலமானது. இறைச்சிகளை வெட்டப் பயன்படுத்தும் கத்திகள், சமையலறையில் உபயோகப்படுத்தும் கத்திகள் ஆகியவற்றைக் கொண்டு இதை உருவாக்கியுள்ளோம். சமையலறைக் கத்திகள் இதில் இடம்பெற்றிருப்பதுதான் வருத்தமான விஷயம். குழந்தைகள் இதைக் கையில் வைத்து விளையாடிக்கொண்டிருப்பர். இது என்னவென்று கூட அவர்களுக்குத் தெரியாது” என்றார்.