வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (04/12/2018)

கடைசி தொடர்பு:16:20 (04/12/2018)

10-வது குழந்தைக்குத் தந்தையான 57 வயது ஹாலிவுட் பிரபலம்!

தன்னுடைய 57-வது வயதில், பத்தாவது குழந்தைக்கு தந்தையாகி இருக்கிறார், பிரபல ஹாலிவுட் நடிகர் எடி மர்ப்பி. இவருக்கும் இவரின் வருங்கால மனைவி பேஜ் புச்சருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளதாக எடியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு மேக்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.

ஹாலிவுட்

நடிகர் எடி மர்ப்பி பெவர்லி ஹில் காப், தி நட்டி ப்ரொபெஸர், டாக்டர் டூலிட்டில் போன்ற பிரபல திரைப்படங்களால் புகழ்பெற்றவர். இவருக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது `டோலமைட்  இஸ் மை நேம்' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ட்ரீம்கேர்ள்ஸ் என்ற படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.

எடி மர்ப்பி,பேஜ் புச்சர்

எடி மர்ப்பி மற்றும் பாலேட்  மேக்நீலி  எனும் அவர் பெண் தோழிக்கு பிறந்த முதல் குழந்தை எரிக், இவருக்கு வயது 29 ஆகும்.மேலும் தோழி தமரா ஹூட் என்பவருடன், கிறிஸ்டைன் (27) என்ற மகனும், பாடகி மெல் பி உடன் அங்கெல் என்கின்ற மகளும் உள்ளனர். பின்னர் இவரது முன்னாள் மனைவி நிக்கோல் மர்ப்பிக்கும், எடிக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். அவர்கள் பிரியா (28), மில்ஸ்(25), ஷெய்ன்(23), சோலா(18) , பெல்லா (16). 

எடி மர்பி, பேஜ் புச்சர் மற்றும் குழந்தைகள் 

பாடகி மெல் பி கருவுற்று இருக்கும் போது, குழந்தை எடி மர்ப்பியினுடையது என்று கூறினார். எடி அதை ஏற்காமல் குழந்தை பிறந்ததும் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு தான் குழந்தை என்னுடையது என ஒப்புக்கொள்வேன் என்றார். மருத்துவ பரிசோதனையில் குழந்தை எடியினடையது என உறுதியானது.முதலில் அவருக்கும், மெல் பி- க்கும் பிறந்த மகள் ஏஞ்சலிடம் நெருங்காதிருந்த எடி, பின்னர் நெருக்கமானதும் குறிப்பிடத்தக்கது.

பாடகி மெல் பி மற்றும் ஏஞ்சல் 

எடி மர்பி தன் குழந்தைகளை பற்றி " என் குழந்தைகள் யாரும் ஒருவரை போல மற்றவர் இல்லை, அவர்கள் அனைவரும் ஒரு தனி தன்மையுடன் உள்ளனர்.இதில் வேடிக்கை என்னவெனில், அவர்கள் ஒருவர் கூட என்னை போல இல்லை, அணைத்து பெற்றோர்களும் இப்படி சொல்வார்கள் எனினும், என் குழந்தைகள் ஒவ்வொருவரும் மிக வித்யாசமாக இருக்கிறார்கள்" என்று கூறியிருக்கிறார்.

எடி மர்ப்பி,பேஜ் புச்சர்,  ஜோடிக்கு மேக்ஸ் இரண்டாவது குழந்தை, இவர்களுக்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் பெயர் இஸி ஆகும். எடி மர்ப்பி தரப்பில் தற்போது மேக்ஸ் பிறந்தது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாயும் செய்யும் நலமாக இருப்பதாகவும், குழந்தை 6 பவுண்ட் எடையில் பிறந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.