குழந்தைகள் பாதுகாப்புக்காக, 3350 கி.மீ சைக்கிளில் பரப்புரை செய்யும் நரேஷ்குமார் | Naresh kumar who travelled 3350 kilometres for kids safety through his cycle

வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (04/12/2018)

கடைசி தொடர்பு:17:09 (04/12/2018)

குழந்தைகள் பாதுகாப்புக்காக, 3350 கி.மீ சைக்கிளில் பரப்புரை செய்யும் நரேஷ்குமார்

நரேஷ்குமார்

நரேஷ் குமார், 20 நாடுகளில் பயணித்திருக்கிறார்; 5 மொழிகள் தெரியும். யார் இவர்... எதற்காக இத்தனை நாடுகளுக்குச் சென்றார். அவரிடமே கேட்போம்.  

``நான் பிறந்து, வளர்ந்தது சென்னையில்தான். எளிமையான குடும்பம். சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலைக்காக சான்ஃபிரான்சிஸ்கோ சென்றேன். அந்த வேலையில் சலிப்படைந்து, 2014 ம் ஆண்டு வேலையிலிருந்து விலகிவிட்டேன். சமூக சேவையில் சின்ன வயதிலிருந்தே ஆர்வம். அதையே முழுநேரப் பணியாக்கிக்கொண்டேன். அமெரிக்காவில் நடந்த 500 கிலோமீட்டர் மாரத்தானை 7 நாள்களில் கடந்தேன். இப்படிக் கடக்கும் முதல் இந்தியர் எனும் பெருமையும் கிடைத்தது. இதில் கிடைத்த பரிசை சமூக நல அமைப்புகளுக்குக் கொடுத்தேன்.

நரேஷ் குமார்

அடுத்து, நியூஸிலாந்தில் 3100 கிலோமீட்டர் வெறுங்கால்களால் நடந்தேன். பனி நிறைந்த சாலை என்பதால், பலரும் தடுத்தார்கள். ஆனால், தயங்காமல் கலந்துகொண்டு, பயணித்த வழியெங்கும் குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியில் வன்முறை குறித்த பரப்புரை செய்தேன். கிடைத்த தொகையையும் வழக்கம்போல தொண்டுநிறுவனங்களுக்குக் கொடுத்தேன். ஆஸ்திரேலியாவில் 5600 கிலோமீட்டர் தூரத்தை, 24 நாள்களில் கடந்துள்ளேன். வெறும் 20 ஆயிரம் டாலர்களை இலக்காகக் கொண்டிருந்தேன். ஆனால், பயண இறுதியில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலர் தொகை கிடைத்தது. அதை குழந்தைகள் நலம் மற்றும் பெண்கள் நலனுக்காக வழங்கினேன்.

நரேஷ் குமார்

மிதிவண்டியில் இதுவரை 3350 கிலோமீட்டர் பயணித்திருக்கிறேன். நான் தனியாகத்தான் பயணத்தைத் தொடங்குவேன். வழியில் லிஃப்ட் கேட்பவர்களுடன் உரையாடி, நட்பாகிவிடுவேன். அவர்களிடம் எனது விழிப்புஉணர்வு பயணத்தைப் பற்றி விளக்க, அவர்களும் என்னுடன் கலந்துகொள்வார்கள். கையில் இருக்கும் பணத்தைக்கூடச் சிலர் தருவார்கள். அவைதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. தற்போது, இந்தியாவில் குழந்தைகள் கடத்தல் மற்றும் பாலியல் வன்முறை தொடர்பாக, விழிப்பு உணர்வு பரப்புரையை கன்னியாகுமரியில் தொடங்கி, ஜெர்மன் வரை செல்ல முடிவெடுத்துள்ளேன். சுமார் 8000 கிலோமீட்டர்கள். பயண இறுதியில், ஜெர்மனியில் நடைபெறும் செஞ்சுருள் சங்கத்தின் மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கிறேன்" என்கிறார். 


[X] Close

[X] Close