வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (05/12/2018)

கடைசி தொடர்பு:13:30 (05/12/2018)

ஆண்டுக்கு ரூ.155 கோடி சம்பாத்தியம்! - ஏழு வயதில் கலக்கும் நிஜ சுட்டி ஸ்டார்

ஏழு வயதில் நாம் என்ன செய்திருப்போம்,  சுமக்க முடியாத அளவுக்கு புத்தகப் பையைச் சுமந்துகொண்டு பள்ளிக்கு போயிருப்போம். மாலையில், எப்போது மணி அடிக்கும், விளையாட ஓடலாம் என்று காத்துக்கொண்டிருந்திருப்போம். ஆனால்,  ரேயான் என்ற 7 வயது சிறுவன், இப்போதே ஆண்டுக்கு ரூ.155 கோடி யூடியூபில் சம்பாதிக்கிறான்.  என்ன, தலைசுற்றுகிறதா... உண்மைதான். யூடியூப் வழியாக அதிகம் சம்பாதிப்பவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளான் இந்தச் சுட்டி. 'ஃபோர்ப்ஸ்' வெளியிட்டுள்ள பட்டியலில்  ஜேக் பாலை பின்னுக்குத் தள்ளிவிட்டு, இந்த ஆண்டு முதலிடத்தைப் பிடித்திருக்கிறான் ரேயான். 

    சுட்டி ஸ்டார் ரேயான்

நடப்பாண்டில், யூடியூப் பே ரோல் விளம்பர வருவாய் வழியாக ரூ.147 கோடியும், ஸ்பான்ஷர் விளம்பரங்கள் வழியாக ரூ.8 கோடியும் வருவாய் பார்த்திருக்கிறான் ரேயான். யூடியூபில் ரேயானைப் பின்தொடர்பவர்கள் மட்டும் 1 கோடியே 73 லட்சம் பேர். அப்படி ரேயான் யூடியூபில் என்ன செய்கிறான் என்கிற கேள்வி எழுகிறதா. 

சுட்டி ஸ்டார் ரேயான்

ரேயான், முட்டிமோதிக்கொண்டு இருக்கவில்லை. ரொம்ப சிம்பிளாக  சந்தைக்கு வரும் பொம்மைக் கார்கள், பொம்மைகள், விளையாட்டு உபகரணங்களை ரீவ்யூ செய்வதுதான் ரேயானின் வேலை. இயல்பான மழலை மொழியில் இயல்பாகப் பேசுவது ஆன்லைன் பார்வையாளர்களைச் சுண்டி இழுத்தது. விளைவு, ரேயானின் பெற்றோர்கள் பண மழையில் குளித்துக்கொண்டிருக்கின்றனர். ரேயானின் ரிவ்யூவைப் பார்த்த பிறகே குழந்தைகள்  சம்பந்தப்பட்ட விளையாட்டு உபகரணங்களை வாங்குகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ரேயானின் வீடியோக்கள் இதுவரை 26 பில்லியன் முறை யூடியூபில் பார்வையிடப்பட்டுள்ளது. 

சுட்டி ஸ்டார் ரேயான்

கடந்த 2015-ம் ஆண்டுதான், அமெரிக்காவைச் சேர்ந்த ரேயானின் பெற்றோர்கள் யூடியூப் சேனல் தொடங்கினார்கள். மூன்றே ஆண்டுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளது சேனல். எல்லாவற்றுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்!

நீங்க எப்படி பீல் பண்றீங்க