`இந்த உடை அணியக் கூடாது!' - பார்லிமென்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பத்திரிகையாளர் | Australian Journalist Kicked Out Of Parliament For Wearing Half-Sleeves Top

வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (06/12/2018)

கடைசி தொடர்பு:11:21 (06/12/2018)

`இந்த உடை அணியக் கூடாது!' - பார்லிமென்ட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட பெண் பத்திரிகையாளர்

ஸ்லீவ்லெஸ் உடை அணிந்ததற்காக, பார்லிமென்ட்டில் இருந்து பெண் பத்திரிகையாளர் ஒருவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. 

பத்திரிகையாளர் பாட்ரிசியா

ஆஸ்திரேலியாவைத் தலைமையிடமாகக்கொண்டு இயங்கும் தொலைக்காட்சி நிறுவனம், ABC News. இந்த நிறுவனத்தின் பெண் பத்திரிகையாளர் பாட்ரிசியா கர்வெலஸ், கடந்த 2-ம் தேதி ஆஸ்திரேலிய பார்லிமென்ட்டில் செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்தார். ஆனால், ஸ்லீவ்லெஸ் உடை அணிந்ததற்காக, செய்தி சேகரிக்க விடாமல் பாட்ரிசியாவை அங்கிருந்த ஊழியர்கள் வெளியேற்றியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விளக்கும் பாட்ரிசியா, ``செய்தியாளர் அறையில் செய்திகள் சேகரிப்பதற்காக அமர்ந்திருந்தேன். அப்போது, என்னிடம் பணிப்பெண் ஒருவர் வந்தார். மிகவும் அமைதியாக இருந்தார் அவர். அந்தப் பெண், ``நீங்கள் அணிந்திருக்கும் உடை, அதிகமாக தோலை வெளிக்காட்டுகிறது என்று எனது உயரதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்" என்றார். நான் ஸ்லீவ்லெஸ் உடையே அணிந்திருந்தேன். இதை அவர்களிடமும் எடுத்துக் கூறினேன். 

பத்திரிகையாளர் பாட்ரிசியா

''இது நல்ல உடைதான். இது எனக்கு மிகவும் பிடிக்கும்'' என்று கூறினேன். ஆனால் அந்தப் பெண், அதை ஏற்கவில்லை. அதனால் அங்கிருந்து நான் வெளியேறவேண்டி இருந்தது" என்று குற்றம் சாட்டியுள்ளார். இது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆஸ்திரேலிய பார்லிமென்ட் சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதற்கிடையே, அந்தப் பெண் பத்திரிகையாளருக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய பெண்கள் போராடத் தொடங்கியுள்ளனர். பெண்கள் பலரும் ஸ்லீவ்லெஸ் உடைகளை அணிந்து பாட்ரிசியாவுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்துவருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close