வெளியிடப்பட்ட நேரம்: 21:36 (08/12/2018)

கடைசி தொடர்பு:21:36 (08/12/2018)

உலக அழகியாக மெக்சிகோவின் வனசா பொன்ஸ் தேர்வு! #MissWorld2018

மெக்சிகோவை சேர்ந்த வனசா போன்ஸ் டி லியான் உலக அழகி 2018 பட்டத்தை வென்றுள்ளார். 

உலக அழகி

2018-ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டி சீனாவில் நடைபெற்றது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 118 இளம்பெண்கள் இதில் கலந்துகொண்டனர். இந்த பிரமாண்ட அழகிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த அனுக்கீர்த்தி பங்கேற்றார். இவர் இந்திய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தார். இறுதிப்போட்டிக்குத் தகுதிபெறும் சுற்றில் 30 பேரில் அனுக்கீர்த்தி இருந்தார். ஆனால்  12 பேர் கொண்ட இறுதிப்போட்டிக்கு அவர் தேர்வாகவில்லை. மெக்சிகோவைச் சேர்ந்த வனசா போன்ஸ் டி லியான் உலக அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். இவருக்குக் கடந்தாண்டு உலக அழகி பட்டம் வென்ற இந்தியாவைச் சேர்ந்த மனுசி சில்லர் கீரிடம் அணிவித்தார். வனசா டி லியான் 68-வது உலக அழகியாக அறிவிக்கப்பட்டார்.