சீனாவுக்கு `நோ' சென்சார் கூகுள் என்ஜின்! - சுந்தர் பிச்சை திட்டவட்டம் | Google ceo speak about china's search engine

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (13/12/2018)

கடைசி தொடர்பு:07:50 (13/12/2018)

சீனாவுக்கு `நோ' சென்சார் கூகுள் என்ஜின்! - சுந்தர் பிச்சை திட்டவட்டம்

'சீனாவுக்கென்று தனியாக கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவுமில்லை' என்று கூகுள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

சுந்தர் பிச்சை

சீனாவில் தேடு பொறி இயந்திரம் செயல்படுவதற்குக் கடுமையான கட்டுப்பாடுகள் உண்டு. சீன அரசின் தணிக்கைக்குப் பிறகே செயல்பட முடியும். சீன மக்கள் எதைத் தேடுகிறார்கள், அவர்கள் எதைப் பார்க்க வேண்டும் என்று சீன அரசே முடிவு செய்யும். இதற்கு அமெரிக்க நாடாளுமன்ற அளவில் மட்டுமல்லாமல் கூகுள் ஊழியர்களிடமும் எதிர்ப்பு இருந்தது. இதனால் 2010 ஆண்டு கூகுள் சீனாவிலிருந்து வெளியேறியது. `ஜனநாயக மதிப்புகளைக் காத்ததற்கும், லாப நோக்கத்தில் செயல்படவில்லை' என்பதற்காகவும் கூகுள் நிறுவனம் பெரும் பாராட்டையும், புகழையும் அமெரிக்காவில் பெற்றது. 

சீனா

இந்த நிலையில், 'சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரம் செய்துகொள்கிறது' என்று அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டது. இந்த விசாரணைக்குக் கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

அவர் கூறியதாவது, 'சீனாவில் கூகுள் தேடு பொறியை அறிமுகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை. சீனாவுக்கான சேவைகளை அளிப்பதில் வெளிப்படையாக இருப்போம். அனைவரும் அனைத்துத் தகவல்களையும் பெற வேண்டும். இது அனைவருக்குமான மனித உரிமை. இந்தக் கொள்கையில் எந்த மாற்றமுமில்லை." 

நீங்க எப்படி பீல் பண்றீங்க