எப்போது இரண்டாவது திருமணம்? - செய்தியாளர் சந்திப்பில் `க்ளூ’ கொடுத்த ரஷ்ய அதிபர் புதின் | 'As a decent man, I would probably have to do it one day' - Putin answer on his marriage

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (21/12/2018)

கடைசி தொடர்பு:10:20 (21/12/2018)

எப்போது இரண்டாவது திருமணம்? - செய்தியாளர் சந்திப்பில் `க்ளூ’ கொடுத்த ரஷ்ய அதிபர் புதின்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

விளாடிமிர் புதின்

புதின் இல்லாமல், ரஷ்யா கிடையாது என்னும் அளவுக்கு நான்கு முறை ரஷ்ய அதிபராக இருந்து உலகத் தலைவர்கள் மத்தியில் தனிப்பெரும் தலைவராகக் கோலோச்சி வருகிறார் விளாடிமிர் புதின். கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்தலில் 76% வாக்குகளைப் பெற்று  வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் வரும் 2024-ம் ஆண்டு வரை அவரே அதிபர் பதவியில் நீடிப்பார். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலக அளவில் புதின் கோலாச்சி வந்தாலும் அதிபர் பதவிக்கு வந்தது முதல் அவரது தனிப்பட்ட வாழ்க்கை அதிகம் அறியப்படாதவையாக இருக்கிறது. 

விளாடிமிர் புதின்

கடந்த 1983-ம் ஆண்டு லுயூத்மிலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார் புதின். இருவரும் முப்பது வருடம் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2013 -ம் ஆண்டு விவாகரத்து பெற்றுக்கொண்டனர். இவர்களுக்கு  மரியா, யெகா டெரினா என்ற 2 மகள்கள் உள்ளனர் என்பது மட்டும்தான் வெளி உலகுக்குத் தெரியும்.  இரண்டு மகள்களுக்கும் 30 வயதுக்கு மேல் இருக்கும். இருப்பினும், மகள்களுடன் புதின் இருக்கும் புகைப்படங்கள்கூட இதுவரை வெளியாகவில்லை. மகள்களை அவர் வெளிநாட்டில் ரகசியமாகத் தங்க வைத்திருப்பதாகவும், மாதம் ஒரு முறை சென்று பார்த்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால், அதைத் திட்டவட்டமாக மறுத்த புதின் ``என் மகள்கள் மாஸ்கோவில்தான் உள்ளனர்" எனத் தெரிவித்தார். 

விளாடிமிர் புதின்

இந்த நிலையில், சமீபகாலமாக முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையும், அரசியல்வாதியுமான அலினா கபேவேவுடன் புதின் டேட்டிங் செய்ததாக வதந்திகள் வந்த வண்ணம் இருந்தன. அவரை புதின் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாகவும் நீண்ட நாள்களாகப் பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது இதற்குச் சூசகமாக விளக்கம் அளித்துள்ளார். தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம் செய்தியாளர் ஒருவர், ``நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள். யாரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்?" என்ற கேள்வியை முன்வைத்தார். இதைக்கேட்டுச் சிரித்த புதின் கேள்வி கேட்ட செய்தியாளர்களைக் கலாய்த்துக்கொண்டே, ``ஒரு மரியாதைக்குரிய நபரான நான் ஒரு நாள் திருமணம் செய்துகொள்ள வேண்டும்" என்று கூறினார். இதன்மூலம் புதின் விரைவில் திருமண பந்தத்தில் இணையவுள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்திவெளியிட்டு வருகின்றன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க