வெளியிடப்பட்ட நேரம்: 21:50 (21/12/2018)

கடைசி தொடர்பு:21:50 (21/12/2018)

புவி வெப்பமாதலால் மாறும் பாலினம் - பச்சை கடல் ஆமைகளை நெருங்கும் ஆபத்து! 

ஆமை

புவி வெப்பமாதலால் ஏற்படும் விளைவுகளைக் கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி கேள்விப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறோம். கடல் மட்டம் உயர்தல், அதீத வெப்பம் என மனிதர்களுக்கும் இன்னும் பல உயிரினங்களுக்கும் அது ஆபத்தை விளைவிக்கும் விதமாக இருக்கிறது. காலநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாகவும் இருக்கிறது. தற்போது புவி வெப்பமாதலால் பச்சை கடல் ஆமைகளுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உயர்ந்து வரும் புவி வெப்பநிலை காரணமாக பச்சை கடல் ஆமைகளில் பெரும்பான்மையானவை பெண்களாக மாற வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

கடல் ஆமைகளில் இருந்து சற்று மாறுபட்டவை இந்த பச்சை கடல் ஆமைகள். ஆமை முட்டையிலிருந்து குஞ்சுகள் பொரிந்த பின் அந்த ஆமைக் குஞ்சுகளின் பாலினமானது சுற்றத்தின் வெப்பநிலையை வைத்தே முடிவு செய்யப்படும். அதன்படி இப்போதிருக்கும் நிலையிலேயே புவியின் வெப்பநிலை உயர்ந்தால் 2100 ஆம் ஆண்டுக்குள் 93 சதவீத பச்சை கடல் ஆமைக் குஞ்சுகள் பெண்களாக உருவாகும் அபாயம் உள்ளது. தற்போது 52% ஆமைக் குஞ்சுகள் பெண்களாக உருவாகி வருகின்றன.

எக்ஸிடெர் பல்கலைக்கழகத்தின் (University of Exeter) ஆராய்ச்சியாளர்கள் IPCC அறிக்கையை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளனர். மேலும் அவர்கள் கூறுவது, பாலின விகிதம் முறையாக இல்லாமல் போனால் பச்சை கடல் ஆமைகள் சூழல் சங்கிலியில் இருந்து விலகிவிடும் என்கின்றனர். புவி வெப்பமாதலால் கடல்நீர் மட்டம் உயர்ந்து வருவதால் தற்போது ஆமைகள் முட்டையிடும் கடற்கரைகளில் 33 - 43 சதவீதம் அழிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. ஏற்கெனவே கடலிலும் கடற்கரையிலும் கொட்டப்படும் பிளாஸ்டிக் போன்ற கழிவுகளால் ஆமைகள் இறந்து வருகின்றன. இந்தலையில் இந்த துயரமும் உடனே வரவிருக்கிறது