கிறிஸ்துமஸ் கிஃப்ட்; ரூ. 14 லட்சம் போனஸ் - ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமெரிக்க நிறுவனம்! | This businessman just gave Rs 14 lakh to every employee as Christmas bonus

வெளியிடப்பட்ட நேரம்: 12:39 (26/12/2018)

கடைசி தொடர்பு:12:39 (26/12/2018)

கிறிஸ்துமஸ் கிஃப்ட்; ரூ. 14 லட்சம் போனஸ் - ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அமெரிக்க நிறுவனம்!

மெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, தனது ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 14 லட்சம் ரூபாய் கிறிஸ்துமஸ் போனஸாகக் கொடுத்து அசத்தியிருக்கிறது. 

கிறிஸ்துமஸ் போனஸ்

அமெரிக்காவின் மிச்சிகன் நகரில், ஃபுளோரா கிராஃப்ட் என்ற கைவினை மற்றும் பூங்கொத்து விற்பனைசெய்யும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில், சுமார் 200 பணியாளர்கள் வேலைபார்த்துவருகின்றனர். 

இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 20,000 டாலர் ( இந்திய மதிப்பில் ரூ. 14 லட்சம்) அளவுக்கு மொத்தம் 4 மில்லியன் டாலரை கிறிஸ்துமஸ் போனஸாக வழங்குவதாக, அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி லியோ சொன்ஹெர் அறிவித்துள்ளார். 

லியோ சொன்ஹெர்

photo credit: @TheMarcusJones

"ஊழியர்களின் கடின உழைப்பைப் பாராட்டும் விதமாக இந்த போனஸ் அறிவிக்கப்படுகிறது. உங்களின் ( ஊழியர்களின்) கடின உழைப்பை நிறுவனம் கண்டுகொள்ளாமல் இல்லை என்பதை இது உங்களுக்கு உணர்த்தும்" என்று அவர் மேலும் கூறியுள்ளார். 

ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்ச போனஸ் 20,000 டாலர் கட்டாயம் என்றாலும், ஒவ்வொரு ஊழியரும் நிறுவனத்தில் எத்தனை ஆண்டுகள் பணியாற்றுகிறார் என்பதைப் பொறுத்து அவர்களுக்கு போனஸோடு, விலை மதிப்பு மிக்க பரிசுப் பொருள்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுபவர்களுக்கு, 60,000 டாலருக்கும் அதிகமாக போனஸ் தொகை வழங்கப்பட்டுள்ளது. 

பரிசு பொருள்

இந்த போனஸ் தொகையை ஊழியர்கள் அநாவசியமாகச் செலவழித்துவிடக் கூடாது என்பதற்காக, அதில் 75 சதவிகிதம் அவர்களது ஓய்வுக்கால நிதித் திட்டத்தில் சேர்க்கப்பட்டு, 25 சதவிகிதத் தொகை மட்டுமே ரொக்கமாக வழங்கப்பட்டுள்ளது. 

 கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு சாண்டா கிளாஸ் தாத்தாதான் குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்களைக் கொடுத்து அசத்துவார். ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊழியர்களுக்கு, அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வழங்கும் போனஸ்தான் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பரிசுப் பொருளாக உள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க