வெளியிடப்பட்ட நேரம்: 15:50 (27/12/2018)

கடைசி தொடர்பு:17:26 (31/12/2018)

குழந்தைகளின் மொழித் திறனை வளர்க்க சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அசத்தல் முயற்சி!

குழந்தைகளின் மொழித் திறனை வளர்க்க சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அசத்தல் முயற்சி!

ஆங்கிலம்

சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் பள்ளி குழந்தைகளுக்காக ஆங்கில மொழிப் பயிற்சி வகுப்புகள் அவ்வப்போது நடத்துவது வழக்கம். இந்த முறை, சற்றே வித்தியாசமான முறை, 6 முதல் 11 வயதுள்ள பள்ளி மாணவர்களுக்காக, ‘பிரைமரி ப்ளஸ்’ என்ற ஆங்கிலம் கற்பிக்கும் பயிற்சி வகுப்புகள் வரும் 2019-ம் ஆண்டு ஜனவரி 5-ம் தேதி முதல் அறிமுகப்படுத்த உள்ளது. குழந்தைகளின் கற்பனை வளம், சிந்தனைத் திறன், தன்னம்பிக்கை ஆகியவற்றையும் வளர்க்கும் நோக்கில் இந்தப் பயிற்சி  வகுப்புகள் நடத்தப்படவிருக்கின்றன. குழந்தைகளுக்குக் கற்பித்தலை மேலும் சுவாரஸ்யமாக்கும் நோக்கில், அனிமேஷன் வீடியோக்கள் மூலமாகவும் ஆங்கில மொழியைக் கற்பிக்கவுள்ளனர். இந்தப் பயிற்சி வகுப்பின் கட்டணம் 11,500 ரூபாய். குழந்தைகள் இந்தப் பயிற்சி வகுப்பில் எப்படிக் கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் அறிந்துகொள்ளலாம். 

ஆங்கிலம்

இது குறித்து, சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் இயக்குநர் ஜனகா புஷ்பநாதன் கூறுகையில், ``இந்தப் பயிற்சி வகுப்புகள் குழந்தைகளின் சிந்தனை மற்றும் மொழித் திறனை மேம்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இது எட்டு வாரங்கள் நடத்தப்படும் பயிற்சி வகுப்பு. பயிற்சி வகுப்பின் இறுதியில், குழந்தைகளுக்குச் சான்றிதழ் வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க