வெளியிடப்பட்ட நேரம்: 11:01 (28/12/2018)

கடைசி தொடர்பு:11:01 (28/12/2018)

`மக்களை மகிழ்ச்சியடையச் செய்வதே சிறந்தது'- சூப்பர் ஹீரோக்களின் பிதாமகன் பிறந்த தினம்! #stanlee

``மெரிக்கா பல்வேறு இனங்களாலும், மதங்களாலும் கட்டமைக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த பூமி என்ற விண்கலத்தில் நம்மோடு சகப் பயணிகளாகப் பயணிக்கிற அனைவரையும் மதித்து அவர்களுக்கு உதவ வேண்டும்” என்றார் காலத்தால் அழியா சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களை உருவாக்கிய ஸ்டேன் லீ. அவர் உருவாக்கிய பெரும்பாலான கதாபாத்திரங்களும் அதிகாரமற்ற, போராட வலிமையற்றவர்களுக்காகத்தான் போராடுவார்கள். அவர் உருவாக்கிய ஒரு கதாபாத்திரம் பேசும்  வசனம் ஒன்று `` உயர்ந்த சக்தி வாய்ந்தவர்களிடம் தான், கண்டிப்பாக அதிகப் பொறுப்புகள் இருக்க வேண்டும்”. இவைதான் இன்றும் அதிகாரத்தில் உள்ள ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டியதாக  உள்ளது.

ஸ்டேன் லீ

ஒரு எளிமையாக குடும்பத்தில் பிறந்து சாதாரண எழுத்தாளராக தன் வாழ்வைத் தொடங்கியவர், தன் கடின உழைப்பால் உலகமே வியக்கும் ஒரு எழுத்தாளனாக மாறிய பிறகும் அவர் கூறுவது, `` எனக்கு உந்துதல்கள் எதுவுமில்லை.  ஐடியாக்களும் அதை முடிப்பதற்கான காலக்கெடு மட்டுமே இருந்தன” என்பதுதான். உழைப்பின் மூலம் தான் சேர்த்த பெறும் செல்வத்தை தன் பெயரில் ஒரு அறக்கட்டளையை நிறுவி, அதன் மூலம் அமெரிக்கா மக்களின் கல்வி முன்னேற்றத்துக்கு செலவிட்டார்.

``என் கதைகளில் எப்போதும்  சிறுபான்மை கதாபாத்திரங்களையும் சேர்த்துக்கொள்வேன். ஏனெனில் பன்முக தன்மை கொண்ட மக்களிடையே வாழ்கின்றோம். நாம் அமைதியாக எவ்வாறு வாழ்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும்” -  ஸ்டேன் லீ

ஜார்ஜ் புஷ் - ஸ்டேன்

``நான் சங்கடப்படுவது உண்டு, பலர் பெரிய பாலங்களை கட்டிக் கொண்டிருக்க, பெரிய மருத்துவ சிகிச்சைகளைச் செய்து கொண்டிருக்க, நான் காமிக் எழுதிக் கொண்டிருக்கின்றேன். ஆனால், அதன் பிறகுதான் புரிந்தது மக்களை மகிழ்ச்சியுரச் செய்வது உயர்ந்தது என்று. உங்களால் மற்றவர் மகிழ்ச்சி அடைகின்றீர்கள் என்றால் நீங்கள் நல்ல செயல் செய்கின்றீர்கள்” என்றார் ஸ்டேன். பல சாகா வரம் பெற்ற கதாநாயகர்களை உருவாக்கிய ஸ்டேன் லீ கடந்த நவம்பர் மாதம் இறந்தார்.  அமைதியைப் போதித்த அந்த மாபெரும் கலைஞனின் 96-வது பிறந்த தினம் இன்று. அவரின் நினைவுகளைப் போற்றுவோம்.