பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய நிலநடுக்கம்! - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி | An earthquake of 6.9 magnitude struck off the southern Philippine island

வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (29/12/2018)

கடைசி தொடர்பு:12:05 (29/12/2018)

பிலிப்பைன்ஸை அச்சுறுத்திய நிலநடுக்கம்! - சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள மிண்டனோ என்ற தீவில் இன்று காலை சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

நில நடுக்கம்

பிலிப்பைன்ஸில் உள்ள ஜெனரல் சான்டோஸ் நகரின் கிழக்கில் 193 கிமீ தொலைவில் பூமிக்கு அடியில் 60 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகி உள்ளது. இதனால் கட்டடங்கள் பயங்கரமாகக் குலுங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட விபத்து சேத விவரம் போன்ற எந்தத் தகவல்களும் இன்னும் வெளியிடப்படவில்லை. 

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பசிபிக் கடலில் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பாக நிலநடுக்கப் பகுதியிலிருந்து 300 கிமீ தொலைவுக்கு பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசிய கடல் பகுதியில் சுனாமி அலைகள்  உருவாகக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த வாரம்தான் இந்தோனேசியாவின் ஜாவா கடற்கரையில், சுந்தா ஜலசந்தியில் உள்ள அனாக் க்ரகடோவா என்ற எரிமலை வெடித்துச் சிதறியது. இதனால், கடலுக்கு அடியில் ஏற்பட்ட நிலச் சரிவின் காரணமாக செராங் மற்றும் சவுத் லம்பாங் ஆகிய பகுதிகளைச் சுனாமி தாக்கியது. தற்போது அங்கு மீண்டும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.