வெளியிடப்பட்ட நேரம்: 08:15 (08/01/2019)

கடைசி தொடர்பு:08:15 (08/01/2019)

மோடி மீண்டும் பிரதமராக வாழ்த்து தெரிவித்த புதின்..!

ந்தியாவில்,  நாடாளுமன்றத் தேர்தல் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள நிலையில். நாடு முழுவதும் ஏற்கெனவே தேர்தல் வேலைகளும்,  கூட்டணிகுறித்த பேச்சுகளும் ஆரம்பித்துவிட்டன. நாடாளுமன்றத் தேர்தலின் அரையிறுதித் தேர்தல் எனக் கருதப்பட்ட ஐந்து மாநிலத் தேர்தலின்மூலம் காங்கிரஸ்தான் சந்தித்துவந்த தொடர் தோல்விகளில் இருந்து மீண்டுள்ளது. இந்நிலையில், வருகின்ற தேர்தலிலும் வெற்றிபெற்று மோடி மீண்டும்  பிரதமராக வர வேண்டும் என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மோடி, புதின்

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம், ரஷ்யாவின் விளாடிவோஸ்டாக் நகரில் நடைபெற உள்ள கிழக்கு பொருளாதார மன்றத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க, மோடிக்கு தொலைபேசியின்மூலம் அழைப்பு விடுத்துள்ளார் புதின் . அப்போது, 2019-ம் ஆண்டு மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த  நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும்  வெற்றிபெற மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், இரு நாட்டு தலைவர்களும் ஒன்றிணைந்து, தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான முடிவுகளையும் எடுத்துள்ளனர்.

கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற ரஷ்யத் தேர்தலில் வெற்றிபெற்று,  தொடர்ந்து இரண்டாவது  முறையாக ரஷ்ய அதிபராக புதின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது மோடி, புதினுக்கு வாழ்த்து தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.