மண் பானையில் பொங்கல்; கொஞ்சும் தமிழில் வாழ்த்து! -தமிழர்களுடன் கொண்டாடிய கனடா பிரதமர் | Canada prime minister celebrate pongal with tamil peoples

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (16/01/2019)

கடைசி தொடர்பு:11:39 (16/01/2019)

மண் பானையில் பொங்கல்; கொஞ்சும் தமிழில் வாழ்த்து! -தமிழர்களுடன் கொண்டாடிய கனடா பிரதமர்

உலகம் முழுவதும் வாழும் தமிழக மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர். உழவர்களுக்கு நன்றி சொல்லும் இந்த பண்டிகை உழவர் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குத் திரும்பித் தங்களது பாரம்பர்ய முறையில் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். 

கனடா பிரதமர்
Photo: Twitter/Kamal Khera

வேலை காரணமாகவும் குறைவான விடுமுறை காரணமாகவும் பலர் தாங்கள் வேலை பார்க்கும் ஊர்களிலேயே பொங்கலை கொண்டாடுகின்றனர். கனடாவில் தமிழர்கள் பலர் உள்ளனர். அங்கு வலுவான தமிழ்ச் சமூகம் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்து வருடமும் அவர்கள் பொங்கல் திருநாளை ஒன்றுகூடிக் கொண்டாடுகின்றனர். 

ஜஸ்டின்

இந்தமுறை கனடா அதிபர் ஜஸ்டின் ட்ரூடோவும் பொங்கல் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். முன்னதாக அவர் வீடியோ மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.  

அதன் பின்னர் கனடாவின் மர்க்கமில் நடந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்ட அதிபர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழில் வாழ்த்து சொல்லியும் பானையில் தன் கைகளால் அரிசியை அள்ளி இட்டு பொங்கலிட்டு தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கலைக் கொண்டாடினார். 

பொங்கல்

அப்போதும் பேசிய அவர், ``அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள். இந்த மாதத்தைக் கனடாவில் தமிழ்ப் பாரம்பர்ய மாதமாக கொண்டாடுவதில் மிக்க மகிழ்ச்சி. கனடாவின் வெற்றிக்கும் அதுதான் காரணம். உலகின் பல கலாசாரங்களை வரவேற்று அதிலிருந்து புதிய விஷயங்களைக் கற்று அதைக் கொண்டாடவேண்டும்.

2019-ம் ஆண்டில் பொங்கலைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். அதாவது இலங்கையில் உள்நாட்டுபோர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகிறது. அதில் பெற்ற காயங்கள், கொடுத்த உயிர்கள் ஏராளம். கனடா வன்முறை மற்றும் அடக்குமுறைக்கு எதிராக இருக்கும். அந்தப் போரின் தாக்கத்திலிருந்து இலங்கை விரைவில் முன்னேற வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசையும். அனைவருக்கும் மீண்டும் தை பொங்கல் நல்வாழ்த்துகள்” என்றார்.  

இந்த வீடியோக்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த அன்புக்கும் வாழ்த்துகளுக்கும் உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழ் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.