8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை! - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம் | Female scientist is eaten alive by crocodile

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (16/01/2019)

கடைசி தொடர்பு:17:40 (16/01/2019)

8 அடி பாய்ந்து பெண் ஆராய்ச்சியாளரை உயிருடன் விழுங்கிய முதலை! - உணவு கொடுத்தபோது நேர்ந்த சோகம்

இந்தோனேசியாவில் உணவு கொடுக்க வந்த பெண் ஆராய்ச்சியாளரை முதலை உயிருடன் விழுங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டேசி
 

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி பகுதியில் சிவி யசோகி என்னும் அறிவியல் ஆராய்ச்சி மையம் ஒன்று உள்ளது. அங்கு மேரி என்னும் 17 அடி முதலை வளர்க்கப்பட்டு வருகிறது. மேரிக்கு தினமும் அங்குள்ள ஆராய்ச்சியாளர்கள் உணவு கொடுப்பது வழக்கம். கடந்த வெள்ளிக்கிழமை காலை 8.45 மணிக்கு ஆராய்ச்சி மையத்தின் பணியாளர்கள் மேரி எதையோ விழுங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர். அருகில் போய் பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

மேரி

டேசி டூவோ என்னும் பெண் ஆராய்ச்சியாளர் மேரிக்கு உணவு கொடுத்தபோது 8 அடி தூரம்வரை தாவி டேசியைத் தண்ணீருக்குள் இழுத்துள்ளது. அப்படியே விழுங்க முயன்றுள்ளது. அந்தச் சமயத்தில்தான் ஊழியர்கள் பார்த்துள்ளனர். மேரி முதலையின் வாயில் இருந்த டேசியை இழுத்துக் காப்பாற்ற முயன்றும் பயனில்லை. இவர்கள் இழுக்க இழுக்க மேரி இன்னும் கடுமையாக டேசியை இறுக்கமாகக் கடித்தது. பின்னர் போராடி டேசியின் உடலை மீட்டுள்ளனர். 


முதலை

தடுப்பு சுவரைத் தாண்டி முதலை எப்படி டேசியை உள்ளே இழுத்தது என ஆராய்ச்சியாளர்கள் குழம்பிப் போயுள்ளனர். `இதற்கு முன்னர் இந்த மேரி என்னும் முதலை மற்ற முதலைகளை விழுங்கிக் கொன்றுள்ளது. ஆனால், மனிதர்களைத் தாக்கியது கிடையாது. ஒரு பெண்ணைக் கொடூரமாகத் தாக்கிக் கொன்றது இதுவே முதல்முறை. டேசி மிகவும் அமைதியானவர். விலங்குகள் மீது அன்பாக இருப்பவர். சிக்கன் துண்டுகளைத் தினமும் மேரிக்குக் கொடுப்பார். இன்று ஏன் இப்படி நடந்தது எனக் குழப்பமாகவும் வருத்தமாகவும் உள்ளது’ என டேசியின் தோழி தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க