`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்! | private Company makes staff crawl on street as punishment

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/01/2019)

கடைசி தொடர்பு:08:43 (19/01/2019)

`டார்கெட்டை முடிக்கவில்லை’ - பெண் ஊழியர்களை முட்டிக்கால் போட்டு நடக்கச் செய்த சீன நிறுவனம்!

சீனாவில் இலக்கை எட்டாத பெண் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கொடூரமான தண்டனையால் சர்ச்சை எழுந்துள்ளது. 

சீனாவில் பெண் ஊழியர்களுககு வழங்கப்ட்ட தண்டனை

ஷான்டோங் மாகாணத்தில் உள்ள சோஷ்குவாங் நகரத்தில் உள்ள தனியார் அலுவலகத்தில் 2018-ம் ஆண்டு விற்பனையில் இலக்கை எட்டாத பெண் ஊழியர்களுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்பட்டது. அழகு சாதன பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனம் தன் ஊழியர்களை இப்படி நடத்திச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. பரபரப்பான சாலையில் ஊழியர்கள் முட்டிக்கால் போட்டவாறு நடந்து செல்ல அவர்களுக்கு முன்னால் ஒருவர் கொடி பிடித்துக்கொண்டு செல்வது போன்ற காணொளி இணையத்தில் வைரலாகியது. 

போலீஸார் உடனடியாகத் தலையிட்டுத் தண்டனையை நிறுத்தினர். சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. சவுத் சைனா போஸ்ட் பத்திரிகை முதன்முதலில் இந்தக் காணொளியை வெளியிட்டது. ஆயிரக்கணக்கானோர் இந்தக் காணொளியை ஷேர் செய்திருந்தனர். சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்குக் கண்டனம் குவிந்தது. ஊழியர்கள் அவமானப்படுத்தும் வகையில் தண்டனை வழங்கிய நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. 

சீனாவில் மனித உரிமை மீறல் செயல்கள் அதிகம் நடைபெறுவதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க