பர்கர் சாப்பிட வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - வைரலாக்கிய நெட்டிசன்கள் | Billgates has stood in a queue at a Burger shop which got viral in social media!

வெளியிடப்பட்ட நேரம்: 00:30 (20/01/2019)

கடைசி தொடர்பு:00:30 (20/01/2019)

பர்கர் சாப்பிட வரிசையில் நின்ற பில்கேட்ஸ் - வைரலாக்கிய நெட்டிசன்கள்

அமெரிக்காவின் சியாட்டல் நகரத்தில் உள்ள டிக்ஸ் டிரைவ் இன் வரிசையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை 63 வயதுமிக்க ஒருவர் சிவப்பு நிற ஸ்வேடர், சாம்பல் நிற பேன்ட் மற்றும் கறுப்பு ஷு அணிந்து வரிசையில் நின்றுகொண்டிருந்த அவர் யார்..?

பில்கேட்ஸ்

பல வருடங்களாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். தன் சொத்தில் பெரும் பகுதியைத் தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கி, உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்தை விட்டவர். இன்றைக்கும் உலகின் டாப் 5 பணக்காரர்களில் ஒருவர். 95 பில்லியன் சொத்துக்கு அதிபதியானவர். 

அவ்வளவு பெரிய பணக்காரர், ஒரு சாதாரண உடையில் மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று, தன் உணவைத் தானே பெற்றுக்கொள்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம். வரிசையில் நின்றது பில்கேட்ஸ் தான். பில்கேட்ஸ் ஒரு பர்கர் பிரியர். இங்கு மட்டுமல்ல, இவரை வாஷிங்டனில் உள்ள பர்கர் மாஸ்டர் டிரைவ் இன்னில் அடிக்கடி காண முடியும். 

வரிசையில் நிற்பது பில்கேட்ஸ் என்று கண்டுகொண்டதும், மைக் க்ளோஸ் என்பவர் இந்த நிகழ்வைப் புகைப்படம் எடுத்து, அதைத் தன் முகப்புத்தகத்தில் பதிவிட்டார். அந்தப் புகைப்படம், அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகைப்படம்தான், இன்று உலகம் முழுவதும் வைரல். பணம் பதவி என்று ஆடும் பலரும், இவரிடமிருந்து கற்றுக்கொள்ள அதிக விஷயங்கள் உள்ளன.