1.6 கோடி பேர் ஃபேஸ்புக்கில் பின்தொடர்ந்த உலகின் அழகிய நாய் 'பூ' மரணம்! | Boo, world's cutest dog, dies in America

வெளியிடப்பட்ட நேரம்: 12:00 (21/01/2019)

கடைசி தொடர்பு:12:01 (21/01/2019)

1.6 கோடி பேர் ஃபேஸ்புக்கில் பின்தொடர்ந்த உலகின் அழகிய நாய் 'பூ' மரணம்!

ஃபேஸ்புக்கில் 1.6 கோடி ஃபாலோயர்ஸைக் கொண்ட உலகின் அழகிய நாயாகக் கருதப்பட்ட ' பூ ' மரணம் அடைந்தது. அதற்கு வயது 12.

நாய் பூ மரணம்

' பூ - வின் நண்பன் பட்டி என்ற நாய் இறந்த பிறகு, அதற்கு இதயத்தில் பிரச்னை ஏற்பட்டது. கடந்த ஒரு வருடமாக அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை உறங்கிக்கொண்டிருந்தபோது, 'பூ' வின் இதயம் வெடித்து உயிரிழந்ததாக, அதன் அமெரிக்க உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

'பூ'வின் பெயரில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கப்பட்டு, பட்டியுடன் அது விளையாடும் புகைப்படங்கள் காணொளிகளை அதன் உரிமையாளர் பதிவேற்றம் செய்துவந்தார். இதன்மூலம், உலகம் முழுக்க அதற்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உருவானார்கள். 

நாய் பூ மரணம்

பூ, பொமேரியன் ரகத்தைச் சேர்ந்தது. இந்த நாயின் பெயரில் Boo: The Life of the World's Cutest Dog" என்ற புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2012-ம் ஆண்டு, விர்ஜின் அமெரிக்காவின் அதிகாரபூர்வ நாயாகவும் பூ அறிவிக்கப்பட்டது. 

கடந்த 2006- ம் ஆண்டு முதல், இந்த நாயை அதன் உரிமையாளர் வளர்த்துவந்தார். 'பூ, பட்டி ஆகிய நாய்களுடன் வாழ்ந்த நாள்கள் மறக்க முடியாதவை' என்று அதன் உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க