24,000 சதுர அடி; 238 மில்லியன் டாலர் - அமெரிக்காவில் கெத்து காட்டும் பில்லியனர்! | Billionaire Purchases New York's Most Expensive Apartment Worth Rs.1692 Cr

வெளியிடப்பட்ட நேரம்: 18:39 (25/01/2019)

கடைசி தொடர்பு:20:04 (25/01/2019)

24,000 சதுர அடி; 238 மில்லியன் டாலர் - அமெரிக்காவில் கெத்து காட்டும் பில்லியனர்!

அமெரிக்கா பில்லியனர் ஒருவர் வாங்கியுள்ள வீடுதான் அந்த நாட்டின் இப்போதைய ஹாட் டாப்பிக். 

பில்லியனர் கென்னத் கிரிஃப்பின்

அமெரிக்காவைச் சேர்ந்த பில்லியனர் கென்னத் கிரிஃப்பின். இவர் புகழ்பெற்ற முதலீட்டு நிறுவனமான சிட்டெலின் சி.இ.ஓ. இவர்தான் நாம் நினைத்துப் பார்த்து முடியாத தொகையில் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கியுள்ளார். நியூ யார்க்கின் சவுத் சென்ட்ரல் பார்க் பகுதியில் உள்ள அபார்ட்மென்ட் வாங்கியுள்ளார். இந்தப் பகுதி நியூயார்க் மிகவும் மதிப்புமிக்க இடமாகக் கருதப்படுகிறது. 

அபார்ட்மெண்ட்

24,000 சதுர அடி கொண்ட இந்த அபார்ட்மென்ட்டை 238 மில்லியன் அமெரிக்க டாலர் கொடுத்து வாங்கியுள்ளார். இதன் இந்திய மதிப்பு 1,692 கோடி. அமெரிக்க வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு அபார்ட்மென்ட் விற்பனை செய்யப்பட்டது இதுவே முதல் முறை. பென்ட்ஹவுஸ் என அழைக்கப்படும் இந்த அபார்ட்மென்ட் அதிநவீன வசதிகளுடன் பிரெஞ்ச் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டது. 

மேன்சன்

இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இதே கென்னத் கிரிஃப்பின் இந்த மாத தொடக்கத்தில் லண்டனின் ஜேம்ஸ் பார்க் பகுதியில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான மேன்சன் ஒன்றை வாங்கியுள்ளார். இதை 8,677 கோடி மதிப்பில் வாங்கினார். இதுவரை குடியிருப்புகளில் விலை உயர்ந்ததாக லண்டனில் உள்ள 'பக்கிங்ஹாம் பேலஸ்' கருதப்படுகிறது. இது அரச குடும்பத்துக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க