`சீக்கிரம் வந்தால் சாப்பாடு' - கூட்ட நெரிசலை தவிர்க்க ஜப்பானியர்களின் யுக்தி! | Tokyo Metro offers free food to passengers who avoid rush hour trains

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (26/01/2019)

கடைசி தொடர்பு:00:00 (26/01/2019)

`சீக்கிரம் வந்தால் சாப்பாடு' - கூட்ட நெரிசலை தவிர்க்க ஜப்பானியர்களின் யுக்தி!

எப்பொழுதும் சுறுசுறுப்பாய் துறு துறுவென இருப்பவர்கள் ஜப்பானியர்கள். ஜப்பானியர்களின் உழைப்பு அவர்களின்வளர்ச்சி உலகநாடுகள் அனைத்தையுமே ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும். 2020ம் ஆண்டு ஒலிம்பிக்போட்டிகளுக்கு டோக்கியோ நகரம் தயாராகி கொண்டிருக்கிறது. இரண்டு கோடிக்கும் அதிகமான சுற்றுலாவினர்ஒலிம்பிக்கை காண டோக்கியோவிற்கு வருவார்கள் என்று கருதப்படுகிறது. பெரும்பாலும் ஜப்பானில் மெட்ரோ ரயில் சேவையை தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது . 

டோக்கியோ மெட்ரோ நிறுவனத்தைச் சேர்ந்த தாஹிரோ யாமாகுச்சி அவர்கள் கூறியதாவது பேசுகையில்,  ``டோக்கியோ மெட்ரோ ரயிலை 70 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தினமும் பயன்படுத்துகின்றனர். காலை 7.50 முதல் 8.50 வரை 76,000க்கும்அதிகமான  பயணிகள் பயணிக்கின்றனர். இது ரயில் கொள்ளளவை விட இரண்டு மடங்கு பயணிகள் பயணிக்கின்றனர். காலை மற்றும் மாலை  வேளை நேரங்களில் தான் அதிகப்படியான கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. படியில் நிற்கும்பயணிகளை உள்ளே தள்ளி கதவை அடைக்கும்  பணிக்கு மட்டும் தனியாக மாணவர்கள் மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். 

இந்தச் சுழலில் ஒலிம்பிக் நடைபெறும் போது இன்னும் அதிகமான பயணிகள் வருகை தரக்கூடும். இந்தக் கூட்டநெரிசலைக் கட்டுப்படுத்த, காலைச் சீக்கிரம் புறப்படும் ரயிலில் பயணிப்பவர்களுக்கு இலவசமாக உணவு வழங்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கூட்ட  நெரிசலைக் கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறோம். சீக்கிரம் வருவதினால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்காக அவர்களுக்கு  இலவச உணவு வழங்கப்படுகிறது'' என்றார்


மெட்ரோ ரயில் அறிவிப்பு


இந்தச் சலுகையை பயன்படுத்த நினைப்பவர்கள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்யவேண்டும். அப்படி முன்பதிவுசெய்து வரும் நபர்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2020-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியால் ஏற்படும் கூட்ட நெரிசல் பாதிப்பை தவிர்க்க இப்பொழுதிலிருந்தே தயாராகிகொண்டிருக்கிறனர் ஜப்பானியர்கள்.