`என் மகள் சாத்தியமாக்கியுள்ளார்!'- பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியின் தந்தை நெகிழ்ச்சி | Suman Kumari becomes Pakistan’s first Hindu woman judge

வெளியிடப்பட்ட நேரம்: 15:55 (29/01/2019)

கடைசி தொடர்பு:15:55 (29/01/2019)

`என் மகள் சாத்தியமாக்கியுள்ளார்!'- பாகிஸ்தானில் முதல் இந்துப் பெண் நீதிபதியின் தந்தை நெகிழ்ச்சி

பாகிஸ்தான் வரலாற்றில் முதல் முறையாக இந்துப் பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 

சுமன் குமாரி

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள குவம்பர் சஹாதகாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் சுமன் குமாரி போதன். இந்து மதத்தைச் சேர்ந்த இவர் பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரில் தனது இளநிலை வழக்கறிஞர் படிப்பை முடித்தார். தொடர்ந்து கராச்சியில் உயர் படிப்பை தொடர்ந்த அவர், தனது முதுநிலை பட்டத்தை முடித்தார். தொடர்ந்து தனியார் சட்ட நிறுவனம் ஒன்றில் வழக்கறிஞராக சுமன் குமாரி பணியாற்றி வந்தார். 

அங்கு பணியாற்றிக்கொண்டிருக்கும்போது நீதிபதி தேர்வுக்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அதன்படி நீதிபதி தேர்வை எழுதியவர் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். தேர்ச்சியடைந்ததை அடுத்து சிவில் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த மாவட்டத்திலேயே அவர் நீதிபதியாகப் பதவியேற்க உள்ளார். 

இதுகுறித்து அவரது தந்தை பவன் குமார் பேசுகையில், ``சிறுபான்மை மதத்திலிருந்து ஒருவர் இந்தப் பதவிக்கு வருவது பெரிய விஷயம். அதை என் மகள் அதை சாத்தியமாக்கியுள்ளார். நேர்மையுடன், நீதி தவறாமல் எனது மகள் பணியாற்றுவாள் என எதிர்பார்க்கிறேன். சொந்த மாவட்டத்திலேயே ஏழை மக்களுக்கு உதவ வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த ஆசை தற்போது நிறைவேறி இருக்கிறது" என்றார். 

பாகிஸ்தான் நீதிபதி சுமன் குமாரி

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சார்ந்த ராணா பகவான்தாஸ் என்பவர் தலைமை நீதிபதியாக 2005 முதல் 2007 வரை பணியாற்றியுள்ளார். ஆனால் இந்து மதத்தைச் சார்ந்த பெண் ஒருவர் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க