ஹெச்-1பி விசா: புதிய கொள்கையை அறிவித்தது அமெரிக்கா! | New policy announced for H1-B visa by Trump administration

வெளியிடப்பட்ட நேரம்: 16:30 (31/01/2019)

கடைசி தொடர்பு:16:30 (31/01/2019)

ஹெச்-1பி விசா: புதிய கொள்கையை அறிவித்தது அமெரிக்கா!

உயரிய கல்வித் தகுதியுடன் வெளிநாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வந்து பணி செய்வோருக்கான புதிய ஹெச்-1பி விசா கொள்கையை அமெரிக்க அரசு முறைப்படி அறிவித்துள்ளது. இந்தக் கொள்கை வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகிறது. இதன்மூலம் அமெரிக்காவுக்கு வெளிநாடுகளிலிருந்து திறமையான பணியாளர்கள் பணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஹெச் 1பி விசா

ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து ஹெச்-1பி விசா விண்ணப்பங்களை பரிசீலனை செய்வதில் புதிய முறை கடைப்பிடிக்கப்படும் என்று அமெரிக்க அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் உயர் படிப்பு படித்துள்ள வெளிநாட்டினருக்கு இத்தகைய விசா வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் சுமார் 3,00,000 இந்தியர்கள், ஹெச்-1பி விசா பெறுவதால் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.

அமெரிக்க அரசின் இத்தகைய எளிமையான ஸ்மார்ட் விசா நடைமுறை மாற்றம் காரணமாக, வேலை வழங்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து பணிபுரிய வருவோருக்கு பலனளிக்கும் என்று அமெரிக்க குடியுரிமை சேவைகள் இயக்குநர் ஃபிரான்சிஸ் சிஸ்னா தெரிவித்தார்.

மேலும் வெளிநாடுகளில் இருந்து திறமைவாய்ந்தவர்களைப் பணியமர்த்த ஹெச்-1பி விசா உதவும். டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்று முதல் இரண்டாண்டுகளில் ஹெச்-1 பி விசாக்கள் வழங்குவது அல்லது அந்தவகை விசா உள்ளவர்களின் கால அவகாசத்தை நீட்டிப்பதில் கடினமாக நடைமுறையைக் கடைப்பிடித்தது. ஆனால், தற்போது அந்த நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

ஹெச்-1பி விசா நடைமுறை எளிமைப்படுத்தப்படுவதன் மூலம் அமெரிக்காவில் ஆண்டுதோறும் 5,340 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரியவந்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க