மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி! | 2 elderly women killed in free-meal stampede in malaysia

வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (01/02/2019)

கடைசி தொடர்பு:19:20 (01/02/2019)

மலேசியாவிலும் இலவசம்... கூட்ட நெரிசலில் சிக்கி இரு மூதாட்டிகள் பலி!

லேசியாவில் இலவச உணவுக் கூப்பனை வாங்கத் திரண்ட கூட்டத்தில் சிக்கி இரு மூதாட்டிகள் பலியாகினர். 

இலவச உணவு கூப்பன் பெற சென்ற மலேசியா மூதாட்டிகள் பலி

சீன புத்தாண்டு 5 மற்றும் 6m தேதிகளில் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கோலாலம்பூரில் அன்றைய தினத்தில் நடைபெறும் விருந்தில் பங்கேற்க இலவச உணவுக் கூப்பன்களை விநியோகிப்பதாகத் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது. சுமார் 200 உணவுக் கூப்பன்களைப் பெற ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஆ போ (வயது 85) லா லான் நங் (வயது 78) என்ற இரு மூதாட்டிகள் பரிதாபமாக பலியாகினர். மேலும், இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலவச உணவுக் கூப்பன்களை பெற முயன்ற வயதான மூதாட்டிகள் இறந்தது மலேசியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 29-ம் தேதி இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. 

பலியான லா லான் நங்கின் மகள் கூறுகையில், ``எங்கள் தாயார் அவ்வப்போது தன் தோழிகளுடன் சேர்ந்து வெளியே செல்வார். அப்படித்தான் எங்காவது சென்றிருக்கலாம் என்று நினைத்தோம். இதுபோன்று இலவச உணவுக் கூப்பன் பெறப்போகிறார் என்றால் நிச்சயம் தடுத்திருப்போம். தாயார் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தது எங்களுக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் உள்ளது’ என்கிறார். பணக்கார நாடான மலேசியாவிலும் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க