கடல்நாயின் கழிவில் இருந்த பென்-டிரைவ்... அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்! | Researchers shocked as they find USB pen-drive in seal faeces in NewZealand

வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (06/02/2019)

கடைசி தொடர்பு:19:30 (06/02/2019)

கடல்நாயின் கழிவில் இருந்த பென்-டிரைவ்... அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

நியூஸிலாந்து நாட்டில், அவ்வப்போது  நீர்நில வாழ் உயிரினமான கடல்நாய்களின் (seal) கழிவுகளை எடுத்து சோதனை செய்வது வழக்கம். இந்த விலங்குகளின் உடல்நலம் சீராக இருக்கிறதா, இவை என்ன உணவை எடுத்துக்கொண்டிருக்கின்றன போன்றவற்றைத் தெரிந்துகொண்டு, அவற்றைக் கண்காணிக்க இச்சோதனையைச் செய்வார்கள். இப்படித்தான், சமீபத்தில் leopard seal இனத்தைச் சேர்ந்த ஒரு கடல்நாயின் கழிவு சோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது,  ஓர் ஆச்சர்யம் காத்திருந்தது.

கடல்நாய்

இந்தக் கடல் நாயின் கழிவில் ஒரு பென்-டிரைவ் கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பென்-டிரைவ் முழுதாக இயங்கும் நிலையில் இருந்தது இன்னொரு ஆச்சர்யம். அதில் ஒரு தாய் தனது குழந்தையுடன் விளையாடும் வீடியோ ஒன்றும், கடல் நாய்களின் புகைப்படங்களும் இருந்துள்ளன. இதன் உரிமையாளர் யாரென்று இன்னும் கண்டறியப்படவில்லை. இதை  ஓர் உடல்நிலை சரியில்லாத leopard seal-லின் கழிவில் இருந்து கண்டறிந்ததாகச் சோதனைசெய்த கால்நடை மருத்துவர் தெரிவித்தார்.

பென் டிரைவ்

இது ஒருபுறம் ஆச்சர்யமாக இருந்தாலும், மறுபுறம் பெரும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. இப்படி அன்டார்டிகாவை நெருங்கியுள்ள பகுதியில் வாழும் கடல்வாழ் விலங்குகளில், இப்படி பிளாஸ்டிக் பொருள்கள் கண்டறியபடுவது மிகவும் கவலை அளிப்பதாக ஆர்வலர்கள் பலரும் தெரிவித்துவருகின்றனர். கடல்களில் பிளாஸ்டிக் என்பது இன்று சிறிய மீன்களில் தொடங்கி திமிங்கிலங்கள் வரை பாதிப்பை ஏற்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க