புகைபிடிப்பதற்காக 100 வயது வரை காத்திருக்க வேண்டும்! - அமெரிக்க அரசின் புது முயற்சி | Legal smoking age 100!

வெளியிடப்பட்ட நேரம்: 19:50 (06/02/2019)

கடைசி தொடர்பு:19:50 (06/02/2019)

புகைபிடிப்பதற்காக 100 வயது வரை காத்திருக்க வேண்டும்! - அமெரிக்க அரசின் புது முயற்சி

புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை, 2020-ம் ஆண்டில் 30 வயது எனவும், 2021ல் 40 வயது எனவும், 2011ல் 50 வயது எனவும், 2023ல் 60 வயது எனவும், 2024ல் 100 வயது எனவும் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2024-ம் ஆண்டில், 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே புகைபிடிக்க முடியும். இந்த வயது வரம்பு, கிட்டத்தட்ட சிகரெட்டை முற்றாகத் தடைசெய்வதற்கு ஒப்பானதாகும்.

'புகைபிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது!' என்ற பிரசாரத்தைப் பெரிய அளவில் செய்தாலும்கூட புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது. இது நம்மூரில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல நாடுகளில் சிகரெட் பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது 18 என நிர்ணயித்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள ஹவாய் மாகாணம், முதன்முறையாக புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது 21 என்று உயர்த்தியுள்ளது. எனினும் புகைபிடிப்பவர்களின் எண்ணிக்கை அங்கே குறைந்தபாடில்லை. எனவே, அந்த அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

புகை

டாக்டர். ரிச்சர்டு கிரியகன் என்ற அமைச்சர், ஹவாய் மாகாணத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புகைபிடிப்பதை முற்றிலும் தடைசெய்யும் சட்டத்திற்கான பரிந்துரை ஒன்றைக் கொண்டுவந்துள்ளார். நம்மூரில் மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்த, மதுக்கடைகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவெடுத்ததுபோலவே, அவர் ஒரு ஐந்தாண்டுத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். 

அதன்படி, புகைபிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பை, 2020-ம் ஆண்டில் 30 வயது எனவும், 2021ல் 40 வயது எனவும், 2011ல் 50 வயது எனவும், 2023ல் 60 வயது எனவும், 2024ல் 100 வயது எனவும் படிப்படியாக உயர்த்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2024-ம் ஆண்டில், 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே புகைபிடிக்க முடியும். இந்த வயது வரம்பு, கிட்டத்தட்ட சிகரெட்டை முற்றாகத் தடைசெய்வதற்கு ஒப்பானது. இப்படித் தடைசெய்வதன்மூலம், புகைபிடிப்பதால் புற்றுநோய் வந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியும் என்று கிரியகன் கருதுகிறார். இந்தச் சட்டம், இ-சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவோரைக் கட்டுப்படுத்தாது.