டொனால்ட் ட்ரம்ப் பேச ஆரம்பித்ததும் ஜோஷ்வா ட்ரம்ப் `கொர்’ | Boy named Trump who fell asleep during US president speach

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (07/02/2019)

கடைசி தொடர்பு:12:15 (07/02/2019)

டொனால்ட் ட்ரம்ப் பேச ஆரம்பித்ததும் ஜோஷ்வா ட்ரம்ப் `கொர்’

மெரிக்காவின் டெலாவர் மாகாணத்தில் வில்மிங்டன் நகரைச் சேர்ந்த சிறுவன் ஜோஷ்வா ட்ரம்ப். பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். சிறுவனின் பெயருடன் ட்ரம்ப் ஒட்டிக்கொண்டிருப்பதால் பள்ளியில் சக நண்பர்கள் மட்டம் தட்டிப் பேசினர். ஜோஷ்வா பேசினாலே ஏய்... இடியட், ஸ்டுபிட் எனத் திட்டி மாணவனை வேதனைப்படுத்தினர். இதனால், ஜோஷ்வா மனம் நொந்துபோனான். பள்ளி ஆவணங்களிலிருந்து ஜோஷ்வாவின் பெயருக்குப் பின்னால் இருந்த ட்ரம்ப் என்கிற பெயரை எடுக்கும் நிலை ஏற்பட்டது. ஜோஷ்வாவின் பரிதாப நிலை வெள்ளை மாளிகையை எட்டியது. சிறுவனை சந்தோஷப்படுத்த டொனால்ட் ட்ரம்பின் மனைவி மெலனியாவும் முடிவெடுத்தார். 

ஜோஷ்வா டிரம்ப்

வெள்ளை மாளிகையில் கடந்த திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சிக்குச் சிறுவனை நேரில் வருமாறு ட்ரம்ப் மனைவி மெலானியா அழைப்பு விடுத்தார். இந்த நிகழ்வுக்கு 533 விருந்தினர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் ஜோஷ்வா ட்ரம்பும் ஒருவன். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மனைவி மெலானியா அருகில் ஜோஷ்வாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதில் வேடிக்கை என்னவென்றால் டொனால்ட் ட்ரம்ப் பேச ஆரம்பித்ததும் ஜோஷ்வா உறங்க ஆரம்பித்துவிட்டதுதான். ஜோஷ்வா ட்ரம்ப் உறங்கும் புகைப்படம் ட்விட்டரில் வைரலாகப் பரவி வருகிறது. `ஜோஷ்வாதான் யாருக்கும் தொந்தரவு தராத நல்ல ட்ரம்ப் 'என்று ட்விட்டர்கள் பாராட்டி வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க