உடல் உறுப்பு தானத்துக்காக குழந்தை பெற்ற தாய்! - அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம் | Mom Carries Dying Baby to Term to Donate Her Organs

வெளியிடப்பட்ட நேரம்: 11:17 (10/02/2019)

கடைசி தொடர்பு:11:20 (10/02/2019)

உடல் உறுப்பு தானத்துக்காக குழந்தை பெற்ற தாய்! - அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

அமெரிக்காவில் தெற்கு பகுதியில் உள்ள டென்னிசி மாகாணத்தைச் சேர்ந்தவர் டெரிக் லோவட் மற்றும் க்றிஸ்டா தம்பதி. க்றிஸ்டா 18 வாரக் கர்ப்பமாக இருந்தபோது எடுக்கப்பட்ட சோதனையில் அவரது வயிற்றில் வளரும் குழந்தை ஒருவித மூளை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். குழந்தை பிறந்தால் மூளை மற்றும் மண்டை ஓட்டில் சில பகுதிகள் இல்லாமல் பிறக்கும். மேலும் குழந்தை 30 நிமிடங்கள் மட்டுமே உயிருடன் இருக்கும் என முன்னதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

PC : Krysta Davis

இவை அனைத்தையும் அறிந்த க்றிஸ்டா குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என முடிவு செய்தார். அப்போது க்றிஸ்டாவுக்கு மருத்துவர்கள் இரண்டு வாய்ப்புகள் வழங்கினர். ஒன்று கரு கலைப்பு மற்றொன்று குழந்தை இறந்ததும் அவரின் உடலை தானம் செய்வது. 

கடந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தில் பிறந்த அந்தக் குழந்தை மிகவும் அதிசயமாக ஒரு வாரம் வரை உயிர்வாழ்ந்துள்ளது. பிறகு மூச்சுத் திணறலால் புத்தாண்டு தினத்தன்று உயிரிழந்துவிட்டது. இறந்த குழந்தையின் இதய வால்வுகளை மற்ற இரு குழந்தைகளுக்கும் நுரையீரல் பகுதிகளை மருத்துவ பரிசோதனைக்கும் கொடுக்கப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய குழந்தையின் தாய் க்றிஸ்டா, ‘ என் குழந்தையால் வாழ முடியாது எனத் தெரிந்தும் நாங்கள் செய்ததை வேறு யாரும் செய்ய மாட்டார்கள். 40 வாரங்கள் இரண்டு நாள்கள் ஆன நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தில் தேவதை பிறந்தால். மருத்துவர்களை ஆச்சரியப்படவைக்கும் அளவுக்கு ஒரு வாரம் அவள் உயிருடன் இருந்தால். அந்த ஒரு வாரமும் அவள் மீது நானும் என் கணவரும் பயித்தியமாக இருந்தோம். அவளின் கடை நிமிடங்கள் வரை தீவிர சிகிச்சை பிரிவில் இல்லாமல் என் அரவணையில் இருந்தாள். பிறகு என் கையில் இருந்தவாறே உயிர் பிரிந்துவிட்டது’ எனக் கூறியுள்ளார். தற்போது உடல் உறுப்பு தானம் தொடர்பான விழிப்புணர்வு பணிகளில் இறங்கியுள்ளார் க்றிஸ்டா.