ஒரே வாரத்தில் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்! - 73 வயது முதியவருக்கு ஏன் திடீர் மவுசு? | How did this 73-year-old YouTuber get 3 million subscribers in a week

வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (11/02/2019)

கடைசி தொடர்பு:20:00 (11/02/2019)

ஒரே வாரத்தில் 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள்! - 73 வயது முதியவருக்கு ஏன் திடீர் மவுசு?

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர் நில்சன் இஸாயஸ் பாபின்ஹோ. போர்ச்சுகீஸ் யூடியூப் சேனல் ஒன்றை நடத்திவரும் 73 வயதான தாத்தா செய்த ஒரு கனிவான செயல் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதன் காரணமாக ஆயிரங்களில் சப்ஸ்கிரைபர்களை பெற்றிருந்தவர் இப்போது மில்லியன்களில் சப்ஸ்கிரைபர்களை வைத்திருக்கிறார். அப்படி என்ன செய்தார் இவர்?

முதியவர்

ஒன்றும் பெரிதாக இல்லை. தனது சேனலுக்கு சப்ஸ்கிரைப் செய்தவர்களுக்கு நன்றி கூறினார் அவ்வளவே. ஆயிரங்களில் இருந்த தனது சப்ஸ்கிரைபர்களின் பெயர்களை ஒரு காகிதத்தில் எழுதி அதை வாசித்து நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டிருக்கிறார் இவர். இவரின் இந்த அன்பு வைரலாக, மொழி புரியாத போதிலும் பலரும் இவரது சேனலின் சப்ஸ்கிரைப் பட்டனை கிளிக் செய்துவருகின்றனர். இப்போது அவர் பதிவிடும் வீடியோக்கள் அனைத்தும் 1 மில்லியனுக்கும் மேலான மக்களால் பார்க்கப்படுகிறது. இன்றைய நிலையில் 4 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் இவருக்கு இருக்கின்றனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ட்விட்டர் கணக்கு தொடங்கிய இவரை இப்போது 1 லட்சம் பேர் பின்தொடுகின்றனர். இப்படி திடீர் பிரபலமாகியுள்ள இவர், இனி எப்படித் தனது மில்லியன்களில் இருக்கும் சப்ஸ்கிரைபர்களுக்கு நன்றி தெரிவிக்கப்போகிறார் என்பதைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க