வேலியைத் தாண்டி பாண்டா கரடிகளின் இடத்தில் விழுந்த சிறுமி... திக் திக் வீடியோ! | Girl falls off fence into Panda exhibit and was rescued in this video

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (11/02/2019)

கடைசி தொடர்பு:21:54 (11/02/2019)

வேலியைத் தாண்டி பாண்டா கரடிகளின் இடத்தில் விழுந்த சிறுமி... திக் திக் வீடியோ!

பொதுவாக பாண்டா கரடிகள் என்றாலே நமக்குள் ஏதோ ஒரு பரவசம் தானாகவே ஏற்பட்டுவிடும். அப்படிதான் நம்மை பழக்கப்படுத்தியும் வைத்திருக்கின்றனர். ஆனால், அவையும் மிருகங்கள்தான், ஆபத்தானவைதான் என்பதை நாம் உணர்வதில்லை. எப்படி பாண்டாக்களின் கியூட் வீடியோக்கள் வலைதளங்களில் வலம் வருகிறதோ அதே போன்று அவ்வப்போது அவை ஆக்ரோஷமாக மனிதர்களைத் தாக்கும் வீடியோக்களும் வலம் வரும். இப்படி இருக்கையில் உயிரியல் பூங்காவில் தவறி பாண்டாகளின் இடத்தில் விழுந்துவிடும் சிறுமியை மீட்கும் திக் திக் வீடியோ ஒன்று இப்போது இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது.

பாண்டாவிடம் சிக்கிய சிறுமி

சீனாவின் செங்டு பகுதியைச் சேர்ந்த உயிரியல் பூங்காவில் பாண்டாக்களை ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தபோது தடுப்புகளைத் தாண்டி நடுவில் இருக்கும் சிறிய குழியில் ஒரு சிறுமி தவறி விழுந்தாள். இதைப் பார்த்ததும் அங்கிருந்த மூன்று பாண்டாக்கள் அருகில் சென்று பார்த்தபடி தாக்காமல் இருந்திருக்கின்றன. முதலில் ஒரு கம்பை வைத்து சிறுமியை மீட்க முயன்று முடியாமல் போக பூங்கா ஊழியர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன் அந்தச் சிறுமிக்கு கை கொடுத்து மேலே ஏற்றியுள்ளார். அதுவரை பாண்டாக்கள் எதுவும் செய்யாமல் வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளன. இப்படிச் சிரமப்பட்டு கைப்பற்றிய ஊழியரை மக்கள் பாராட்டிவருகின்றனர். வேடிக்கை பார்த்த பாண்டாக்களும் மக்களிடம் லைக்ஸை பெற்று வருகின்றன. வீடியோ கீழே,

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க