`நிராகரித்த அமெரிக்க செனட் சபை' - எமெர்ஜென்சியைக் கொண்டுவந்தார் ட்ரம்ப்! | US President Trump Declares National Emergency

வெளியிடப்பட்ட நேரம்: 08:52 (16/02/2019)

கடைசி தொடர்பு:08:52 (16/02/2019)

`நிராகரித்த அமெரிக்க செனட் சபை' - எமெர்ஜென்சியைக் கொண்டுவந்தார் ட்ரம்ப்!

மெக்ஸிகோ எல்லைச் சுவர் திட்டத்துக்காக அமெரிக்காவில் எமெர்ஜென்சியை அமல்படுத்தியுள்ளார் அதிபர் ட்ரம்ப்.

ட்ரம்ப்

அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லைப் பகுதியில், பாதுகாப்பு காரணத்துக்காக சுவர் எழுப்பத் திட்டமிட்டுள்ளார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இந்தத் திட்டத்துக்கு 40,000 கோடி ரூபாய் செலவாகும் எனக் கூறப்படுகிறது. அதற்கு, செனட் சபை ஒப்புதல் தரவேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். `இந்த வேண்டுகோளை நிறைவேற்றாவிட்டால், அமெரிக்க அரசாங்கம் காலவரையின்றி மூடப்படும் (கவர்மென்ட் ஷட் டவுண்) என்றும், எட்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கட்டாய விடுமுறையில் இருக்க வேண்டும் அல்லது ஊதியமில்லாமல் வேலை செய்ய உத்தரவிடப்படும்' எனவும் எச்சரித்திருந்தார். 

ட்ரம்ப்

அவரின் வேண்டுகோளை செனட் சபை மறுக்கவே, கடந்த டிசம்பர் 22-ம் தேதி முதல் அரசாங்கம் முடக்கப்பட்டது. இதனால், பல முக்கியத் துறைகள் முடங்கியுள்ளதால், லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் தவித்தனர். "எல்லையில் சுவர் கட்டுவதற்காக மாதங்கள் அல்ல... வருடக்கணக்கில்கூட அரசு அலுவல்களை முடக்குவோம்" அறைகூவல் விடுத்த ட்ரம்ப்பால், ஜனவரி 25-ம் தேதி வரை 35 நாள்கள் அரசுத்துறை முடக்கம் நீட்டித்தது. ஒருவழியாக, நிபந்தனைகளுடன் அரசுத் துறை முடக்கம் முடிவுக்கு வந்தது. இருப்பினும், `சுவர் கட்டியே தீருவேன்' என ட்ரம்ப் ஒற்றைக்காலில் நிற்கிறார்.

ட்ரம்ப் 

அவரைச் சமாளிக்கும் வகையில், பிப்ரவரி14-ம் தேதி ஓட்டெடுப்பு நடத்தி, ஒரு புதிய நிதி மசோதாவை அங்கீகரித்திருக்கிறது. இந்த நிதி மசோதாவில், சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் கடுப்பான ட்ரம்ப், தான் எச்சரித்தது போலவே அமெரிக்காவில் `அவசர நிலை'யைப் பிரகடனப்படுத்தியுள்ளார். நேற்று மாலை, `தேசிய அவசரநிலை' பிரகடனப்படுத்துவதாக அவர் அறிவித்துள்ளார். எமெர்ஜென்சி அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன்மூலம் கிடைக்கும் அதிகாரத்தைக் கொண்டு எல்லைச்சுவர் கட்டுவதற்குத் தேவையான நிதிக்கு, தாமே ஒப்புதல் அளிக்க உள்ளார். ட்ரம்ப்பின் இந்த எமெர்ஜென்சி உத்தரவுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல உள்ளதாக எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளன. எமெர்ஜென்சி உத்தரவால், அமெரிக்காவில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close